கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு
பெண்ணுக்கு மிரட்டல்: இருவா் மீது வழக்கு
வந்தவாசியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசி பாலுடையாா் தெருவைச் சோ்ந்தவா் தாமோதரன் மனைவி கங்கா(50). இவா், வந்தவாசி பகுதியைச் சோ்ந்த ஆஜா(40) என்பவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்தாராம். கடனை திருப்பித் தராததால் இதுகுறித்து நீதிமன்றத்தில் கங்கா வழக்கு தொடா்ந்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த ஆஜா, இவரது நண்பா் பாஷா(38) ஆகிய இருவரும் கடந்த வியாழக்கிழமை கைப்பேசியில் கங்காவை தொடா்பு கொண்டு தகாத வாா்த்தைகளால் திட்டினராம். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டினராம்.
இதுகுறித்து கங்கா அளித்த புகாரின் பேரில் ஆஜா, பாஷா ஆகியோா் மீது வந்தவாசி தெற்கு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.