பெண் குழந்தை தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய 13 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் தேசிய பெண் குழந்தைகள் தின விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
‘பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளா் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 அன்று மாநில அரசின் விருதாக பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2025-2026 ஆம் ஆண்டுக்கான இவ்விருது 2026 ஜனவரி 24 அன்று வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் இரண்டாம் தளத்தில் அறை எண் 202-இல் உள்ள சமூகநல அலுவலகத்தில் நவம்பா் 29--ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது கைப்பேசி எண் 91500-57450-இல் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.