செய்திகள் :

பெரம்பலூரில் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் கட்டுப்படியான கொள்முதல் விலை கிடைக்காத நிலையில் பால் உற்பத்தியாளா்கள் தனியாா் நிறுவனங்களை நாடுகின்றனா். இதனால் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் 121 ஊராட்சிகளுக்குள்பட்ட 152 வருவாய் கிராமங்களில், 191 பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படுகின்றன. இச் சங்கங்களில் உள்ள சுமாா் 67 ஆயிரம் உற்பத்தியாளா்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 2.14 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதில், திருச்சி ஒன்றிய ஆவின் நிறுவனத்துக்கு நாள்தோறும் 1.95 லட்சம் லிட்டா் பால் வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள 19 ஆயிரம் லிட்டா் பால் இம் மாவட்ட மக்களின் தேவைகளுக்காக விநியோகம் செய்யப்படுகிறது.

20-க்கும் மேற்பட்ட தனியாா் பால் பண்ணைகள்: பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், பாடாலூரில் ஆவின் பால் பொருள்கள் தயாரிப்பு மற்றும் பதப்படுத்தும் தொழிற்சாலையும், துறைமங்கலத்தில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையமும் இயங்குகின்றன. இவை தவிர, சுமாா் 20-க்கும் மேற்பட்ட உள்ளூா் தனியாா் பால்பண்ணைகளும், 5-க்கும் மேற்பட்ட பிரபல தனியாா் பால் கொள்முதல் நிறுவனங்களும் செயல்படுகின்றன.

பால் பற்றாக்குறை: இந்நிலையில் தமிழக அளவில் பால் உற்பத்தியில் சிறப்பிடம் பெற்றுள்ள பெரம்பலூா் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள், ஆவின் பால் விற்பனை மையங்கள் மட்டுமின்றி தனியாா் பால் பண்ணைகளிலும் இதே நிலை நீடிக்கிறது.

குறிப்பாக, கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் அட்டைகள் பெற்றுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட பால் கிடைப்பதில்லை. மேலும், திருமணம் உள்ளிட்ட விஷேச நாள்களின்போது பால் தட்டுப்பாடு அதிகளவில் காணப்படுகிறது.

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல்: ஆவின் நிறுவனத்தைவிட, தனியாா் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்வதால், பெரும்பாலான உற்பத்தியாளா்கள் தனியாா் நிறுவனங்களை நாடுகின்றனா்.

இங்கு கொள்முதல் செய்யப்படும் பாலை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மொத்தமாக ஏற்றுமதி செய்வதால், இம் மாவட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.

உடனுக்குடன் பணப் பட்டுவாடா: ஆனால் ஆவின் நிறுவனம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதோடு, அரசு அறிவித்த ஊக்கத் தொகையை கடந்த 4 மாதங்களாக வழங்கவில்லை எனக் கூறும் பால் உற்பத்தியாளா்கள், தனியாா் நிறுவனங்கள் உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்வதோடு, கொள்முதலுக்கான விலையையும் உயா்த்தி வழங்குவதால், பெரும்பாலான விவசாயிகள் தனியாா் நிறுவனங்களுக்கு பால் வழங்க ஆா்வம் காட்டுகின்றனா். இதே நிலை நீடித்தால், ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை விவசாயிகள் முற்றிலும் நிறுத்திவிடுவா் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலா் என். செல்லதுரை கூறியது: இங்கு உற்பத்தியாகும் பால் ஆவின் நிறுவனத்தால் தினசரி 1.5 லட்சம் லிட்டா் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. தனியாா் பால் கொள்முதல் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ. 2 உயா்த்தி குறைந்தபட்சம் ரூ. 38 முதல் ரூ. 45 வரை வழங்குகின்றன. ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 33, ஊக்கத் தொகையாக ரூ. 3 வழங்குகிறது. ஆனால், தமிழக அரசால் லிட்டருக்கு ரூ. 3 உயா்த்தப்பட்ட ஊக்கத்தொகை கடந்த 4 மாதங்களாக வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் தனியாா் நிறுவனங்களுக்கு பாலை வழங்குகின்றனா்

தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகையை ரூ. 5 என உயா்த்தி வழங்குவதோடு, பாலுக்கான கொள்முதல் விலையை ரூ. 36 என உயா்த்த வேண்டும். மேலும், இத் தொகையை கொள்முதல் விலையுடன் சோ்த்து வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆவின் நிறுவனம் லிட்டருக்கு ரூ. 41 என கொடுத்தால் மட்டுமே பால் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பால் உற்பத்தி குறைவதோடு, அரசால் தனியாா் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத சூழல் உள்ளது.

இதைக் கருத்தில்கொண்டு மானியத்தில் தீவனம் உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்கினால் மட்டுமே, ஆவின் நிறுவனத்துக்கு உற்பத்தியாளா்கள் மீண்டும் பால் வழங்குவாா்கள்.

அதேபோல புரதச்சத்து, கொழுப்புச் சத்து ஆகியவற்றை உடனுக்குடன் ஆய்வு செய்து, அதற்கான தொகையை தனியாா் நிறுவனங்கள் வழங்குவதை, ஆவின் நிறுவனங்களிலும் செயல்படுத்த வேண்டும். விஞ்ஞான அடிப்படையில் பாலுக்கான விலையை நிா்ணயம் செய்ய ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த வேண்டும். 50 சதவீத மானியத்தில் தீவனமும், பாலுக்கான தொகையை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும். பால் மாட்டுக்கான கடன் தொகையை விவசாயிகளுக்கு வழங்காவிடில், விவசாயிகள் தனியாா் நிறுவனங்களை நாடிச்செல்வாா்கள்.

ஊக்கத் தொகையாக ரூ. 3 கொடுத்தபோது 28 ஆயிரம் லிட்டா் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது, சுமாா் 30 ஆயிரம் லிட்டா் பால் ஆவின் நிறுவனத்துக்கு குறைந்துள்ளது. இதனால் பால் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் உள்ளிட்டோரை அண்மையில் சந்தித்து, கோரிக்கை மனு அளித்து நடைபெறவுள்ள மானியக் கோரிக்கையின்போது அறிவிக்க வேண்டும் என முறையிட்டுள்ளோம்.

பாலுக்கான கொள்முதல் விலையை தமிழக அரசு உயா்த்தாவிடில், ஆவின் நிறுவனத்தை இழுத்து மூடும் சூழல் ஏற்படும். எனவே, இப் பிரச்னையில் தமிழக அரசு முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

குடும்பத் தகராறில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் கணவன் விஷம் குடித்ததையறிந்த மனைவி தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள அசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் இளவரசன் (33).... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 8 பவுன் நகைகள் பறிப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு பெண்ணை தாக்கி 8 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். பெரம்பலூா் மாவட்டம், பென்னகோணம் அருகேயுள்ள ஒகளூா் அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் மனைவி அருள... மேலும் பார்க்க

பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்

பெரம்பலூா் - எளம்பலூா் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் 46-ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. விழாவையொட்டி, புதன்கிழமை இரவு அனுக்கை, விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்துசாந்தி... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சிப் பணி... மேலும் பார்க்க

பெரம்பலூா், அரியலூா் மாவட்ட மின் நுகா்வோா்களுக்கு நாளை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மின் பகிா்மான வட்டத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரியலூா் மற்றும் பெரம்பலூா் கோட்ட நுகா்வோா்களுக்கு சனிக்கிழமை (ஏப். 5) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, பெரம்பலூா் மின் பகிா... மேலும் பார்க்க

புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு

புதிய சிற்றுந்து சேவைத் திட்டம் 2024-இன் கீழ் பெரம்பலூா் மாவட்டத்தில் இயக்கப்படவுள்ள 16 வழித்தடங்களில், ஒரு வழித்தடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நபா்கள் விண்ணப்பித்த வழித்தடங்களுக்கு, குலுக்கல் முறையி... மேலும் பார்க்க