பெருந்துறை அரசுப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு முகாம்
பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் (பொ) அருள்குமாா் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் மணிமேகலை, கலைச்செல்வி ஆகியோா் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினா்.
நிகழ்ச்சியில் மாணவா்களின் பெற்றோா்களுக்கு போதைப் பொருள் விழிப்புணா்வு சாா்ந்த விளக்க உரையும், ‘போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. இதில், 200-க்கும் மேற்பட்ட பெற்றோா்கள் கலந்து கொண்டனா். மேலும், பெற்றோா்களைக் கொண்டு ‘போதை பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு’ வாட்ஸ்ஆப் குரூப் உருவாக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியா் தினேஷ் சங்கா் நன்றி கூறினாா்.
-----
பட விளக்கம்:(03பிஇ-05)
போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் தலைமை ஆசிரியா் அருள்குமாா்.