செய்திகள் :

மதம் மாறி திருமணம் செய்ய மறுப்பு; வீடு புகுந்து பெண் கழுத்தை அறுத்து கொலை - ம.பி-யில் அதிர்ச்சி!

post image

மத்திய பிரதேச மாநிலம், நவாரா என்ற இடத்தில் வசித்தவர் பாக்யஸ்ரீ(35). இவரிடம் அதே ஊரை சேர்ந்த ஷேக் ரியாஸ்(42) என்பவர் தன்னை திருமணம் செய்யும்படி நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்தார். அவரை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று துன்புறுத்தி வந்தார். அதுவும் முஸ்லிம் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்யவேண்டும் என்று ஷேக் கூறி வந்தார். ஆனால் பாக்யஸ்ரீ அதற்கு மறுத்து வந்தார். திடீரென இரவு பாக்யஸ்ரீ வீட்டிற்குள் நுழைந்த ஷேக் தன்னிடம் இருந்த கத்தியால் பாக்யஸ்ரீயை சரமாரியாக குத்தினார். மேலும் பாக்யஸ்ரீயின் கழுத்திலும் கத்தியால் வெட்டிவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த பாக்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷேக்கை கைது செய்தனர். ஷேக் மீது இதற்கு முன்பு பாக்யஸ்ரீ உள்ளூர் போலீஸ் செக்போஸ்டில் புகார் செய்தபோது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே அப்போலீஸார் மீதும், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஷேக் உறவினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பாக்யஸ்ரீ உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதிச்சடங்கை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து பாக்யஸ்ரீயின் சகோதரி சுபத்ரா கூறுகையில்,''ஷேக் எனது சகோதரியின் முடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்வார். நீண்ட நாட்களாக மதம் மாறி திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தினார். ஆனால் எனது சகோதரி அதற்கு சம்மதிக்கவில்லை''என்று தெரிவித்தார்.

வழக்கறிஞர் கொலை வழக்கு; 90 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - நடந்தது என்ன?

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகானந்தம். இவரது சித்தப்பா தண்டபாணி (60). இவருக்கும், முருகானந்தத்தின் தந்தையான... மேலும் பார்க்க

'50 சிசேரியன்' செய்த வசூல்ரஜா MBBS; 10 வருட 'போலி' மருத்துவர் - சிக்கியது எப்படி?

கமல் நடிப்பில் வந்த காமெடி படமான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் போல நிஜ வாழ்க்கையில் வலம் வந்த போலி மருத்துவர் அசாம் மாநிலத்தில் சிக்கியுள்ளார்.சில்சார் என்ற நகரில் மகளிர் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுண... மேலும் பார்க்க

பள்ளி முதல்வரை பணி நீக்கம் செய்ய தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த மாணவன்; 3 பேர் கைது - என்ன நடந்தது?

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் இருக்கும் ஹுலிகட்டி என்ற இடத்தில் இருக்கும் அரசு பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக முதல்வராக இருந்தவர் சுலைமான் கோரிநாயக். இப்பள்ளியில் இருந்த தண்ணீர் தொட்டிய... மேலும் பார்க்க

நாமக்கல்: கடன் தொல்லை - ராசிபுரத்தில் 3 பெண் குழந்தைகளை கொலை செய்து தந்தை விஷம் அருந்தி தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(35). இவரது மனைவி பாரதி(26). இந்த தம்பதியினர்களுக்கு 10 பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 4 குழந்தைகள் ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: மாயமான மாணவன் பள்ளி கிணற்றில் சடலமாக மீட்பு; இறுதிச் சடங்கில் போலீஸார் குவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகிலுள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் அப்புக்குட்டி என்கிற முகிலன் (வயது 16). திருப்பத்தூரில், அரசு நிதியுதவியுடன் செயல்படக்கூடிய `த... மேலும் பார்க்க

`குடிப்பழத்தால் என் மகன், நான் இறந்துவிட்டதாக கூறி சொத்தை விற்றுவிட்டான்' -90 வயது முதியவர் கண்ணீர்

பீகாரில் ஒருவர் தனது தந்தை உயிருடன் இருக்கும் போதே, அவர் இறந்து விட்டதாக கூறி குடும்ப சொத்தை மகன் விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள முஜாபர்பூர் அருகில் இ... மேலும் பார்க்க