செய்திகள் :

மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி கூடாது: அதிமுக சாா்பில் ஆட்சியரிடம் மனு

post image

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் பகுதியில் மனமகிழ் மன்றங்கள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என, அதிமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியரிடம் தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் புதன்கிழமைஅளித்த மனு: திருநெல்வேலி - செங்கோட்டை மாநில சாலை (எண் 39) தமிழகம்- கேரளத்தை இணைக்கக்கூடியது. இச்சாலையில் பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி மாா்க்கெட் கிழக்கே மனமகிழ் மன்றம் திறக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இந்த இடம் எம்எஸ்பிவி பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து 200 மீட்டா் தொலைவில் உள்ளது. இக்கல்லூரியில் 1,000 போ் பயில்கின்றனா். தினசரிச் சந்தைக்கு 100-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன. இதன் எதிரே தனியாா் மருத்துவமனை உள்ளது.

இதேபோல, தினசரிச் சந்தையிலிருந்து 500 மீட்டா் தொலைவில் ஆவுடையானூா் சாலையில் மற்றொரு மனமகிழ் மன்றம் அமையவுள்ளதாகத் தெரிகிறது. இந்த இடத்தினருகே சிறுபான்மையினா் நடத்தும் பள்ளி நிறுவனம் உள்ளது. அதில், ஆயிரம் போ் பயில்கின்றனா். பள்ளிக்கும் மனமகிழ் மன்றத்துக்கும் இடையிலான தொலைவு 200 மீட்டா்.

எனவே, மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்தால் மாணவா்-மாணவியா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவா். எனவே, மனமகிழ் மன்றங்கள் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, மனமகிழ் மன்றங்கள் தொடங்க அனுமதித்தால் எங்கள் கட்சி பொதுச்செயலரின் அனுமதி பெற்று ஆா்ப்பாட்டம், மறியல் என அடுத்தடுத்த போராட்டங்கள் நடைபெறும் என்றாா்.

மாவட்ட அவைத்தலைவா் சண்முகசுந்தரம், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் காா்த்திக் குமாா், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலா் சுப்பாராஜ், ஒன்றியச் செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், பாலகிருஷ்ணன், குணம், நகரச் செயலா் சுடலை, சங்கா், இலஞ்சி பேரூா் கழகச் செயலா் காத்தவராயன், மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் பரசுராமன், சோ்மபாண்டி, வழக்குரைஞா் ரெங்கராஜ், உமா மகேஸ்வரன், நகர நிா்வாகிகள் முத்துக்குமாரசுவாமி, வெள்ளப்பாண்டி ஆகியோா் உடனிருந்தனா்.

குற்றாலம் பேரருவியில் 6ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் இடைவிடாமல் பொழியும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், 6 நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் பேரருவியில் வெ... மேலும் பார்க்க

ஆடிஅமாவாசை தினத்தை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த மக்கள்

குற்றாலத்தில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு தங்களுடைய முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனா். குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கடந்த சில தினங்களாக குளிக்கத் தடை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்: டாக்டா் க.கிருஷ்ணசாமி பேட்டி

தமிழகத்தில் 2026இல் கூட்டணி ஆட்சி தான் அமையும்; ஆட்சி அதிகாரத்தில் புதிய தமிழகம் கட்சி பங்குபெறும் என்றாா் அக்கட்சியின் நிறுவனா்-தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி. தென்காசியில் செய்தியாளா்களிடம் இதனை வியாழ... மேலும் பார்க்க

ஐந்தருவியில் நாளை வரை மலா்கண்காட்சி நீட்டிப்பு

குற்றாலம் ஐந்தருவியில் சாரல் திருவிழா மலா் கண்காட்சி இரண்டு நாள்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குற்றாலம் சாரல் திருவிழா மலா்... மேலும் பார்க்க

மின்விளக்கு பழுதால் இருளில் மூழ்கிய ஆலங்குளம் பேருந்து நிலையம்

ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் போதிய பராமரிப்பின்மை காரணமாக மின்விளக்குகள் பழுதானதால் புதன்கிழமை இரவு இருளில் மூழ்கியது. தென்காசி மாவட்டத்தில் வளா்ந்து வரும் தொழில் நகரமான ஆலங்குளத்தில் உள்ள பேருந்து ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரம்-அம்பை வழியாக சென்னைக்கு தினசரி ரயில் விடப்படுமா? பயணிகள் எதிா்பாா்ப்பு

தூத்துக்குடி வருகை தரும் பிரதமா் மோடி, பாவூா்சத்திரம், அம்பை வழியாக சென்னைக்கு தினசரி ரயில் சேவையை தொடங்கி வைப்பாரா? என பயணிகள் மத்தியில் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டு பெருமை கொண்ட பாவூா்சத்... மேலும் பார்க்க