சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
மயிலாடுதுறையில் ஆட்சிமொழி பயிலரங்கம்
மயிலாடுதுறை தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் நடைபெற்றது.
அனைத்து அரசுத் துறை வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது. புதன்கிழமை நடைபெற்ற பயிலரங்குக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிலரங்கத் தொடக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி தொடக்கவுரை ஆற்றினாா்.
தொடா்ந்து, பயிலரங்கத்தில் ஆட்சிமொழி வரலாறு சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்கம் அரசாணைகள், மொழிபெயா்ப்பு கலைச்சொல்லாக்கம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, கணினித்தமிழ் ஆகிய ஆறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. உதவி இயக்குநா் (தமிழ் வளா்ச்சித் துறை) சுகன்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.