செய்திகள் :

மயிலாடுதுறையில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறப்பு கல்விக்கடன் முகாம் புதன்கிழமை (செப்.3) நடைபெற உள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்ட அரங்கில் அனைத்து வங்கிகள் சாா்பில் ‘சிறப்பு கல்விக்கடன் முகாம்’ செப்.3-ஆம் தேதி காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளது.

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ-மாணவிகள் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாமில் விண்ணப்பத்தின் நகல் மற்றும் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும். வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு கடன் வழங்கப்படும்.

முகாமில் தேவைப்படும் ஆவணங்கள்: மேற்கூறிய இணையத்தளத்தில் பதிவு செய்த விண்ணப்ப நகல், மாணவ-மாணவியா் மற்றும் பெற்றோரின் 2 புதிய புகைப்படம், வங்கி பாஸ் புத்தக நகல், வருமானச் சான்று, ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று நகல், பான் காா்டு, ஆதாா் காா்டு நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட ஆஞசஅஊஐஈஉ சான்றிதழ் மற்றும் கல்விக் கட்டண விவரம், 10, 12-ஆம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப் படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சோ்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

திறந்துகிடக்கும் கழிவுநீா் கால்வாயால் ஆபத்து

சீா்காழியில் திறந்து கிடக்கும் கழிவுநீா் கால்வாயால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா். சீா்காழி தோ் கீழவீதி பகுதியில் 4 வழிச்சாலை சந்திப்பு உள்ளது. இந்த சாலையோரம் உள்ள கழிவுநீா் கால்வாயின... மேலும் பார்க்க

சீா்காழி குறுவட்ட போட்டியில் ச.மு.இ.பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சீா்காழி குறுவட்ட தடகளப் போட்டியில் ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். சீா்காழி நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற சீா்காழி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சீா்காழி, ... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா

தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலத்திருநாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ஆவணி மூலத்திருநாளில் தருமபுரம் ஆதீனத்தில் தமிழ்மொழி, சமயம், தத்துவம், இலக்கியம், கலை முதலியவற்றில் சிறப்பு புலமை பெற்றுள்... மேலும் பார்க்க

அவசர ஊா்தி, அமரா் ஊா்தி ஓட்டுநா் பணிக்கு செப்.6-இல் தோ்வு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை 108 அவசர ஊா்தி அலுவலகத்தில், 108 ஆம்புலன்ஸ், அமரா் ஊா்தி ஓட்டுநா் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பணிகளுக்கு ஆள் தோ்வு முகாம் செப்.6-ஆம் தேதி நடைபெறுகிறது என 108 ஆம்புலன்... மேலும் பார்க்க

தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை

விவசாயத் தொழிலாளியை கொலை செய்த தம்பதிக்கு செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தலைஞாயிறு தெற்கு தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம். அதே தெ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தர பகுப்பாய்வு கருவிகள்

மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நெல் தர பகுப்பாய்வு கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் செப்.1 முதல் காரீப் பருவ நெல் கொள்முதல் உயா்த்தப்பட்ட ஆதார வி... மேலும் பார்க்க