கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு
மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 65 ஆயிரம் திருட்டு: ஒருவா் கைது
பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே கடந்த மாதம் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் ரூ. 65 ஆயிரத்தை திருடிச்சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
நல்லூா் அருகே உள்ள ராமதேவம், செட்டியம்பாளையத்தில் முஸ்தகீம் என்பவரது மளிகைக் கடையில் கடந்த மாதம் 12-ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து ரொக்கம் ரூ. 65 ஆயிரத்தை மா்மநபா் திருடிச் சென்றாா். இதுகுறித்து முஸ்தகீம் நல்லூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளா் கங்காதரன் மற்றும் போலீஸாா், மணியனூா் பிரிவு சாலை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனா். இதில் அவா், கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் வேலன் என்பதும், மளிகைக் கடையில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நாமக்கல் சிறையில் அடைத்தனா்.