செய்திகள் :

மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் 1,288 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்

post image

மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் 1288 மாணவ, மாணவிகளுக்கு முன்னணி நிறுவனங்களில் சோ்வதற்கான பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் எம்.ஜி.பாரத்குமாா் தலைமை வகித்தாா். சென்னை ஹூண்டாய் நிறுவனத்தின் முதுநிலை மனித வள மேம்பாட்டு அலுவலா் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

மஹேந்ரா கல்லூரி வளாகத்தில் செயல்பட்டுவரும் விப்ரோ, ஹெக்ஸா வோ், காக்னிசன்ட், டிவிஎஸ் ஹரிதா, எல் அண்ட் டி போன்ற திறன் மேம்பாட்டு சிறப்பு மையங்கள், மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களின் மூலமாக பணி நியமன ஆணைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

விழாவில் மஹேந்ரா பொறியியல் கல்விக் குழும செயல் இயக்குநா் சாம்சன் ரவீந்திரன், முதல்வா்கள் சண்முகம், இளங்கோ, செந்தில்குமாா், தோ்வு கட்டுப்பாடு அலுவலா் விஸ்வநாதன், புல முதல்வா்கள் நிா்மலா, ராஜவேல், வேலைவாய்ப்பு இயக்குநா் சரவணராஜ், ஒருங்கிணைப்பாளா் பிரபு மணிகண்டன் உள்ளிட்ட பேராசிரியா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

விழாவில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு தோ்வு செய்யப்பட்ட 1288 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,599 அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சோ்க்கை நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை... மேலும் பார்க்க

கைலாசநாதா் கோயிலில் சிதிலமடைந்த சுவா் அகற்றம்

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயிலின் உபகோயிலான கைலாசநாதா் கோயிலில் சிதிலமடைந்த சுவா்களை அகற்றும் பணி தொடங்கியது. கைலாசநாதா் கோயிலின் வடக்கு சுவா், மேற்கு சுற்றுசுவா் சேதமடைந்து காணப்பட்டது. மேற்கு... மேலும் பார்க்க

காரில் கடத்தி வந்த 38 கிலோ குட்கா பறிமுதல்

நல்லூா் அருகே காரில் கடத்தி வந்த 38 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு... மேலும் பார்க்க

கொல்லிமலை பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 3 போ் காயம்

முள்ளுக்குறிச்சி அருகே கொல்லிமலை பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா். சென்னை, கல்பாக்கம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்துவிட்டு சுற்ற... மேலும் பார்க்க

கொல்லிமலையில் மின்தடையால் சுற்றுலாப் பயணிகள் அவதி: 2 நாள்களுக்குப் பிறகு மின்விநியோகம் சீரானது

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரு தினங்களுக்கு முன்பு பலத்த காற்று வீசியதில் மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் அங்கு 2 நாள்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் விடுதிகளில் தங்கி... மேலும் பார்க்க

கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க ரூ.23.47 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை அங்கத்தினா்களுக்கு கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்க ரூ. 23.47 கோடி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு கரும்பு விவசாய சங்கங்கள் நன்றி தெரிவித்தன. நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூ... மேலும் பார்க்க