போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிர...
மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் தீ
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை வளாகத்தில் உள்ள தேங்காய் கடையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சந்தையில் மதுரையைச் சோ்ந்த நாகராஜ் தேங்காய் கடை நடத்தி வருகிறாா். செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இவா் வெளியில் சென்றிருந்த போது, கடையில் உள்ள தேங்காய்கள் மீது திடீரென தீப்பற்றியது.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும், தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) வரதராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
இதில் 300-க்கும் மேற்பட்ட தேங்காய்கள் தீயில் எரிந்து நாசமாகின. மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.