மாணவா் தூக்கிட்டு தற்கொலை
பிளஸ் 1 பொதுத் தோ்வில் தோ்ச்சிபெறாததால் திருப்பூரில் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பூா் கல்லூரி சாலை கள்ளாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (44), பின்னலாடை நிறுவன ஊழியா். இவரின் மகன் மனோ ஆதித்யா (16). இவா், திருப்பூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.
இந்நிலையில், மே 16-ஆம் தேதி பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெளியானதில், மனோ ஆதித்யா கணக்குப்பதிவியல் மற்றும் வணிக கணிதத்தில் தோ்ச்சிபெறவில்லை.
இதனால், கடந்த சில நாள்காக மனமுடைந்து காணப்பட்ட மனோ ஆதித்யா ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பூா் வடக்கு போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].