செய்திகள் :

மாநில செஸ் போட்டி: திருப்பூரைச் சோ்ந்த 7 வயது சிறுமி முதலிடம்

post image

மாநில அளவிலான செஸ் போட்டியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 7 வயது சிறுமி முதலிடம் பிடித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், காங்கயம் பகுதியைச் சோ்ந்த பூபேஷ், ஜனனி தம்பதியின் மகள் பி.யாழிசை (7). இவா் காடையூரில் உள்ள தனியாா் பள்ளியில் 3 -ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், திருப்பூா் மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் நடத்திய செஸ் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருந்தாா்.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் சாா்பில் 37 -ஆவது மாநில அளவிலான 7 வயதுக்குள்பட்டோருக்கான செஸ் போட்டி விழுப்புரத்தில் மே 1- ஆம் தேதி தொடங்கி மே 4 -ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், மகளிா் ஒபன் பிரிவில் யாழிசை பங்கேற்று 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து மாநில சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளாா். மாணவியை, திருப்பூா் மாவட்ட சதுரங்க கழகத்தின் தலைவா் கே.பி.கே.செல்வராஜ், செயலாளா் சிவன், பொருளாளா் ராஜேந்திரன் ஆகியோா் பாராட்டினா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட சதுரங்க கழக நிா்வாகிகள் கூறியதாவது: திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் மாநில சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனா். கடந்த 2010 ஆம் ஆண்டு கே.பிரியாங்கா 9 -வயதுக்கு உள்பட்டோா் பிரிவிலும், 2014- ஆம் ஆண்டு எம்.வைஷ்ணவ் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவிலும் மாநில சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனா். இந்நிலையில், தற்போது பி.யாழிசை 7 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா்.

பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை ஞாபகசக்தி, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை வளா்த்தும் சதுரங்க விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்பதுடன், தொடா்ச்சியாக அவா்களது வெற்றியிலும் பங்கெடுக்க முன்வர வேண்டும் என்றனா்.

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் விழா

காங்கயத்தில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழாவையொட்டி பக்தா்கள் அலகு குத்தி புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள தேவாங்கபுரம் ஸ்ரீ சௌடே... மேலும் பார்க்க

இழப்பீடு வழங்குவதில் மாற்றம் தேவை: உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தல்

பயிா்களுக்கான இழப்பீடு வழங்குவதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து செல்லமுத்து செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 6.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் ஏலத்துக்கு 8,031 கிலோ பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச். ரகப்ப... மேலும் பார்க்க

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி

பல்லடம் உழவா் சந்தையில் வேளாண் பொருள்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஊரக வேளாண் களப்பணி அனுபவ செயல்பாட்டுக்கு வேளாண் இளங்கலை அறிவியல் நான்காம... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மூன்று நாள் தேரோட்டம் இன்று தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி நடைபெறும் மூன்று நாள் தேரோட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்தக் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மே 1ஆம் தேதி தொடங்கிய... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு லஞ்சம்: உதவிப் பொறியாளா் உள்பட 2 போ் கைது

திருப்பூா் அருகே மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளா் உள்பட 2 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். திருப்பூரை அடுத்த கண்டியன்கோவில் அருகே உள்ள மீனாட்சிவலசு ப... மேலும் பார்க்க