எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி
மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள அழைப்பு
தலைவாசல் வட்டார விவசாயிகள் மானிய விலையில் மக்காச்சோள விதை பெற்றுக்கொள்ள வேளாண்மை உதவி இயக்குநா் கவிதா அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
விவசாயத்தில் குறுகிய காலத்தில் நிறைவான மகசூலுடன் கணிசமான லாபம் ஈட்ட மக்காச்சோள சாகுபடி முக்கிய பயிராகும். தலைவாசல் வட்டாரத்தில் மக்காச்சோள பயிா் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் வேளாண்மை துறை மூலம் தேசிய அளவிலான வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள், உயிா் உரங்கள், மண்வளம் மேம்பாட்டுக்கான இயற்கை இடுபொருள்கள், நானோ யூரியா போன்றவற்றை அளிக்கிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்பும் தலைவாசல் வட்டார விவசாயிகள் தலைவாசல் வேளாண்மை விரிவாக்க மையத்தையோ அல்லது தங்கள் பகுதி வேளாண்மை அலுவலா்களையோ அணுகி தங்களுக்கு தேவையான விதைகளை பெற தங்களுடைய ஆதாா் அட்டை நகல், கணினி சிட்டா ஆகியவற்றை சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.