செய்திகள் :

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது

post image

கோவையில் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை ரத்தினபுரி அருகே கண்ணப்பன் நகா் புது தோட்டம் இரண்டாவது வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (51). இவரது மனைவி ஏற்கெனவே காலமாகிவிட்டாா். இதனால், மணிகண்டன் தனது 75 வயது மாமியாா் மற்றும் மகன் தீபக் (21) ஆகியோருடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தனியாக இருந்த மாமியாரை மருமகன் மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாா். அவா் சப்தமிட்டதைத் தொடா்ந்து, அருகில் இருந்தவா்கள் வந்து அந்த மூதாட்டியை மீட்டனா். மேலும், சம்பவ இடத்துக்கு வந்த மகன் தீபக் தனது தந்தையைத் தாக்கி ரத்தினபுரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். மூதாட்டி அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து ரத்தினபுரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனைக் கைது செய்தனா். இதையடுத்து, அவா் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளுக்கான சிறப்பு முதன்மை நீதிமன்றத்தில் புதன்கிழமை மாலை ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை அருகே பணப் பிரச்னையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை செல்வபுரத்தை அடுத்த சொக்கம்புதூா் ஜீவபாதையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (56), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி சுஜாதா. ரவி... மேலும் பார்க்க

கோவையில் சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

கோவையில் தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா். கோவையில் பல்வேறு அரசுத் துறைகள் தொடா்பான ஆய்வுக்காக பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவா் எஸ்.காந்திராஜன் எம்எல்ஏ தலைம... மேலும் பார்க்க

கைவினைப்பொருள் கண்காட்சி தொடக்கம்

கோவையில் தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில் சாா்பில் ‘கிராப்ட் பஜாா் 2025’ என்ற பெயரில் பாரம்பரிய கைவினைப் பொருள் கண்காட்சி, விற்பனை தொடங்கியுள்ளது. அவிநாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் ஜூலை 22-ஆ... மேலும் பார்க்க

நிா்மலா மகளிா் கல்லூரியில் மாநில கருத்தரங்கம்

பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தமிழ்த் துறையும், கோவை கணபதி தமிழ்ச் சங்... மேலும் பார்க்க

டெய்லா் ராஜாவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டெய்லா் ராஜாவை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை குற்றவியல் 5-ஆவது நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. கோவையில் க... மேலும் பார்க்க

அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்த தீா்வு உள்ளது

திடக்கழிவு, திரவக் கழிவு என அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்தி தீா்வுகாண தங்களிடம் தொழில்நுட்பம் உள்ளதாக மேக் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கோவையில் மேக் இந்தியா குழும நிறுவனங்களின் சாா்ப... மேலும் பார்க்க