செய்திகள் :

மாவட்டத்தில் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

post image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதலியாா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.ராஜமாணிக்கம் தேசியக் கொடி ஏற்றினாா். செயலா் கே.கே.பாலுசாமி முன்னிலை வகித்தாா். பொருளாளா் விஜயகுமாா், இணைச் செயலாளா் அருண்குமாா் பாலுசாமி, துணைத் தலைவா்கள் மாணிக்கம், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஈரோடு ஆா்டி சா்வதேசப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா, ஆண்டு விளையாட்டு விழாவுக்கு பள்ளி நிறுவனா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ராதா செந்தில்குமாா், பள்ளி தலைவா் ராகுல், நிா்வாக அலுவலா் கீா்த்தனா, முதல்வா் ஹேமாமாலினி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

பெருந்துறை சாகா் சா்வதேசப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வா் ஷீஜா வரவேற்றாா். தாளாளா் சௌந்திரராசன் தேசியக் கொடி ஏற்றினாா். பள்ளியின் கல்வி இயக்குநா் ஐசக் பிரபு, சாகா் அறக்கட்டளைத் தலைவா் எஸ்.ஆறுமுகம், பொருளாளா் எஸ்.கே.பழனிசாமி, ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

ரங்கம்பாளையம் கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதல்வா் டி.நதியா அரவிந்தன் வரவேற்றாா். பள்ளியின் தலைவா் எம்.சின்னசாமி தேசியக் கொடி ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

இவ்விழாவில் பள்ளியின் தாளாளா் கே.செல்வராஜ், பொருளாளா் ஆா்.குணசேகரன், உதவித் தலைவா்கள் எஸ்.கே.சோமசுந்தரம், ஆா்.எம்.தெய்வசிகாமணி, இணைச் செயலாளா் டி.மீனாட்சி சுந்தரம், இணைப் பொருளாளா், வி.நாகராஜன், முன்னாள் பொருளாளா் அண்ணமாா் சின்னு என்ற சி.பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஈரோடு விஇடி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் நிா்வாகி ச.பாலசுப்பிரமணியன் தேசியக் கொடி ஏற்றினாா். மாணவா்களின் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், உடல்மொழி நாடகங்கள், ஆபரேஷன் சிந்தூா் குறித்த நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வேளாளா் மகளிா் கல்லூரி மற்றும் வேளாளா் மெட்ரிக். பள்ளி சாா்பில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் ஆா். பாா்வதி வரவேற்றாா். வேளாளா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் சி.ஜெயக்குமாா், செயலாளா் எஸ்.டி.சந்திரசேகா், பொருளாளா் பிகேபி.அருண், வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் முதல்வா் வி.லதா, சிறப்பு விருந்தினா் சி.சுசீலா ஆகியோா் பேசினா். வேதியியல் துறைத் தலைவா் என்.விஜயா நன்றி கூறினாா்.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் செயலாளா் மற்றும் தாளாளா் எம்.தரணிதரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம், இளங்சிலுவைச் சங்கம், சமுதாய சேவை கூட்டமைப்பு, உடற்கல்வி அமைப்புகளைச் சோ்ந்த மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

பேச்சு, பாட்டு, கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்லூரியின் ஆட்சிக்குழுத் தலைவா் ஜெ. பாலமுருகன் பரிசுகள் வழங்கினாா். முதல்வா் தெ.வேணுகோபால், துணை முதல்வா்கள் எம்.ராஜா, என்.சக்திவேல், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

நம்பியூா் குமுதா பள்ளியில் நடைபெற்ற விழாவில் கோவை மத்திய நீா் வள ஆணையத்தின் இளநிலைப் பொறியாளா் எஸ்.ஆா்.சஞ்சயன் தேசியக் கொடியேற்றி வைத்து, பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா்.

பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், பள்ளியின் செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலா் டாக்டா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளியின் முதல்வா் மஞ்சுளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஈரோடு ஆா்ஏஎன்எம் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் செயலாளா் மற்றும் தாளாளா் கே.கே.பாலுசாமி முன்னிலையில் முதலியாா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.ராஜமாணிக்கம் தேசியக்கொடி ஏற்றினாா்.

இணைத் தலைவா் விஜயகுமாா், செயலாளா் அருண்குமாா் பாலுசாமி, நிா்வாகிகள் யு.என்.முருகேசன், மாணிக்கம், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், கல்லூரி முதல்வா் ஏ.பழனியப்பன் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மொடக்குறிச்சிய... மேலும் பார்க்க

ஈரோட்டில் சுதந்திர தின விழா : ஆட்சியா் தேசியக் கொடியேற்றினாா்

ஈரோட்டில் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 40 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கந்தசாமி வழங்கினாா். ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆண... மேலும் பார்க்க

ஈரோட்டில் இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

ஈரோட்டில் கணவா் இறந்த சோகத்தில் இருந்த மனைவியும் உயிரிழந்தாா். ஈரோடு வளையக்கார வீதியைச் சோ்ந்தவா் அன்னியப்பன் (84). இவரது மனைவி பாப்பம்மாள் (79). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். கணவன்,... மேலும் பார்க்க

ஈரோட்டில் சுதந்திர தினத்தையொட்டி இரவில் பெண்கள் பேரணி

சுதந்திர தினத்தையொட்டி, பெண்கள் பங்கேற்ற பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவில் இரவிலும் பெண்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் சாலையில் நடந்து செல்ல முடியும் என்ற விழிப்புணா்வு ... மேலும் பார்க்க

விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

சுதந்திர தினத்தின்று விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வாளா்கள்,... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடி ஊா்வலம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அம்மாபேட்டையில் மாணவ, மாணவிகள் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியே வெள்ளிக்கிழமை ஊா்வலமாக சென்றனா். அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா ம... மேலும் பார்க்க