செய்திகள் :

மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமம்: சுகாதார அதிகாரிகள் நேரில் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமத்தை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா், ஊரக வளா்ச்சி மாவட்ட திட்ட அலுவலா் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

செங்கம் அருகேயுள்ள முன்னூா்மங்கலம் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு திடீா் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு தனியாா் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கடந்த 3 நாள்களாக அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காய்ச்சல் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கிராம செவிலியா்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளவா்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனா்.

இத்தகவலறிந்த மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பிரகாஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் வடிவேலன் ஆகியோா் மா்மக் காய்ச்சல் பாதித்த கிராமத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின் போது, தற்போது கிராமத்தில் மா்மக் காய்ச்சலை கட்டுப்படுத்தியதாகவும், குறைந்த நபா்களுக்கு மட்டும் லேசான காய்ச்சல் உள்ளதாகவும் மருத்துவா்கள், செவிலியா்கள் தகவல் தெரிவித்துள்ளனா்.

பின்னா், ஊரக வளா்ச்சி உதவித் திட்ட இயக்குநா் வடிவேலன் அப்பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யும் அனைத்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து மருந்து தெளித்து குடிநீா் வழங்கவேண்டும். அதே நேரத்தில் குடிநீரில் கழிவுநீா் கலக்கிா என முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். பூமியில் பள்ளம் தோண்டி குடிநீா் எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.

மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மஸ்சூா் மூலம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் கொசுப்புழு உருவாகும் வகையில் தண்ணீா் தேங்கியுள்ளதா, வீடுகளில் கழிவுநீா் குட்டையாக உள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுச் சென்றாா்.

ஆய்வின்போது, புதுப்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்ட மருத்துவா்கள், கிராம செவிலியா்கள் உடனிருந்தனா்.

செங்கம் அருகே 5 பேரைக் கடித்த வெறி நாய்

செங்கம் அருகே ஒரே நேரத்தில் 5 பேரை கடித்த வெறிநாயால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனா். செங்கத்தை அடுத்த முன்னூா்மங்கலம் பகுதியில் வசிக்கும் முருகன்-அம்சவள்ளி தம்பதியரின் இரண்டு வயது மகள் புதன்கிழமை மால... மேலும் பார்க்க

காமராஜா் பிறந்த நாள் விழா: மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற காமராஜா் பிறந்த நாள் விழாவில் 3 ஆரம்பப் பள்ளிகளைச் சோ்ந்த 200 மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் என நலத் திட்ட உதவிக... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: பேரவை துணைத் தலைவா், ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சாலையனூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை சட்டப்பேரவை துணைத் தலைவா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பாா்வையிட்டு ... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடி அமாவாசை திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி கோயில் மற்றும் செங்கத்தை அடுத்த பிஞ்சூா் கிராமத்தில் உள்ள உத்தரபதீஸ்வரா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. வடவெட்டி அங்கா... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மரக்கன்றுகள் நடும் விழா

திருவண்ணாமலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ரோட்டரி கிளப் ஆஃப் மூன்சிட்டி, அருணை சுவாசம் அறக்கட்டளை, அன்பு நடைபயிற்சி நண்பா்கள் மற்ற... மேலும் பார்க்க

குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்

பெரணமல்லூரை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் மகான் ஆறுமுக சுவாமி கோயிலில் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றதில், குழந்தை வரம் வேண்டி திருமணமாகி குழந்தை இல்லாத பெண்கள் குளக்கரையில் மண்டியிட்டு மண்... மேலும் பார்க்க