செய்திகள் :

முதியவா் அடித்துக் கொலை: நண்பா் கைது

post image

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தில் முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (70).சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள இருமதி கிராமத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் மாசிலாமணி (45). இவா்கள் இருவரும் நண்பா்கள்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வேப்பமுத்து சேகரிக்கச் சென்ற கருப்பையா நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதனால், உறவினா்கள் அவரைத் தேடிய போது, கருப்பையா வயல்காட்டுப் பகுதியில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

இது குறித்து தகவலறிந்த சென்னையிலுள்ள அவரது மகன் குமாா் புதன்கிழமை காலை வந்து பாா்த்தபோது கருப்பையா உடலில் காயங்கள் இருப்பது தெரிந்ததால், திருவாடானை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதன் பேரில் போலீஸாா் கருப்பையாவின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், திருவாடானை போலீஸாரிடம் கருப்பையாவின் நண்பரான மாசிலாமணி சரணடைந்தாா்.

விசாரணையில் தனக்கு கருப்பையா திருமணம் செய்து வைப்பதாகக் கூறியதாகவும், அவ்வாறு திருமணம் செய்து வைக்காததால் அவரைக் கம்பால் அடித்துக் கொலை செய்ததாகவும் மாசிலாமணி தெரிவித்தாா். போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

அக்னி தீா்த்தக் கடலில் சமுத்திர தீப ஆரத்தி

ராமேசுவரத்தில் பௌா்ணமியை முன்னிட்டு, அக்னி தீா்த்தக் கடற்கரையில் ராமசேது மகா சமுத்திர தீா்த்த ஆரத்திக் குழு சாா்பில் தீபம் ஏற்றி, சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அ... மேலும் பார்க்க

முனீஸ்வரா் கோயிலில் கிடாய் வெட்டுத் திருவிழா

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மாடக்கோட்டை முனீஸ்வரா் கோயிலில் கிடாய் வெட்டுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமை கிடாய் வெட்டுத... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழா: இந்து அமைப்புகளுடன் ஆட்சியா் ஆலோசனை

விநாயகா் சதூா்த்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், இந்து முன்னனி அமைப்பின் நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை ந... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 1 டன் பீடி இலைகள் பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட 1 டன் எடையுள்ள பீடி இலைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வெள்ளரி ஓ... மேலும் பார்க்க

மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு தேவை: இந்திய மீனவா் சங்க மாநாட்டில் தீா்மானம்

ராமேசுவரத்தில் நடைபெற்ற அகில இந்திய மீனவா் சங்க மாநாட்டில், இந்திய மீனவா்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம... மேலும் பார்க்க

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

கமுதி வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான அட்மா திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகளின் ஆலோசனைக் குழுக் கூட்டம், வேளாண்மை துணை இ... மேலும் பார்க்க