மேற்கு வங்கம்: கனமழைக்கு 2 பேர் பலி
மேற்கு வங்கத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
மேற்கு வங்க மாநிலம், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தின் கட்டல் உள்பட பல பகுதிகளில் சனிக்கிழமை கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 பேர் பலியாகினர். கட்டல் துணைப்பிரிவு அதிகாரி சுமன் பிஸ்வாஸின் கூறுகையில், கட்டல் தொகுதி மற்றும் நகராட்சியின் பல இடங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
ஆனால் சந்திரகோனா, பாக்கா பாயிண்ட் மற்றும் கேதா ஆறு ஆகிய இடங்களில் நீர்மட்டம் இப்போது குறைந்து வருகிறது. சந்திரகோனாவின் நிலைமை சீரானது. ஆனால் கட்டலில், நிலைமை மோசமடைந்து வருகிறது. மருத்துவக் குழுக்களை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் மீட்புக் குழு தற்போது செயல்பாட்டில் உள்ளது.
ஐரோப்பிய சாம்பியன்ஷிப்: வரலாற்று வெற்றியை ருசித்த போலந்து மகளிரணி!
கிஷ்வாரா பகுதியைச் சேர்ந்த ஒருவர் காணவில்லை. நாங்கள் அவரைத் தேடி வருகிறோம். இந்த வெள்ளத்துக்கு 2 பேர் பலியாகினர். கட்டல் தொகுதியில் உள்ள கோடி போனார்பூரைச் சேர்ந்த 7 வயது பள்ளி மாணவி சுல்தானா பலியானார். மேலும் ஒருவரைக் காணவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், மழைக்காலம் தொடங்கியதிலிருந்து ஹிமாசலில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, ஜூன் 20 முதல் ஜூலை 10 வரை 91 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.