செய்திகள் :

ரஷியா - உக்ரைன் போர்: இந்தியா, சீனாவின் முதன்மை நிதியே காரணம் - அதிபர் டிரம்ப்

post image

ரஷியாவிலிருந்து தொடர்ந்து எரிபொருள் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போருக்கு இந்தியாவும் சீனாவும் முதன்மை நிதியாளர்களாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவிலிருந்து எரிபொருள் வாங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அவையின் 80 வது பொதுக்குழு கூட்டம் நியூயார்க் நகரில் இன்று (செப். 23) நடைபெற்றது. இதில், அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்றுப் பேசினார். இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு இக்கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்கிறார்.

இதில், எல்லை ஊடுருவல், சட்டவிரோத குடியேற்றம், உக்ரைன் போர் ஆகியவை குறித்து டிரம்ப் பேசியதாவது,

''உக்ரைன் மீது ரஷியா நடத்திவரும் போருக்கு முதன்மை நிதியாளர்களாக சீனாவும் இந்தியாவும் உள்ளனர். அவர்கள் ரஷியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்து தொடர்ந்து வணிகம் மேற்கொள்வதால் ரஷியாவுக்கு மறைமுகமாக நிதியளித்து உதவுகின்றன.

ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவிடமிருந்து எரிசக்தி கொள்முதல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். இவர்கள் ரஷியா உடனான வணிகத்தை நிறுத்த வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றால், நாம் அதிக நேரத்தை வீணடிக்கிறோம் என்று பொருள்.

திறந்தவெளி எல்லை என்பது தோல்வியுற்ற சோதனைகளாக உள்ளது. மேற்கு நாடுகளில் புலம்பெயர்வு செய்பவர்கள் நரகத்திற்குச் செல்லவுள்ளனர். பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான வேகம் ஹமாஸுக்கான வெகுமதி'' எனத் தெரிவித்தார்.

உலகில் அதிகம் துன்பத்திற்குள்ளாகும் மதமாக கிறிஸ்தவம் மாறி வருவதாக மறைமுகமாகக் குறிப்பிட்ட டிரம்ப், இன்று உலகில் அதிகம் துன்புறுத்தப்படும் மதம் உள்பட பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரத்தை பாதுகாப்போம் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க |இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: ஐ.நா. அவையில் 50வது முறை கூறிய டிரம்ப்!

India, China primary funders of Ukraine war The Donald Trump show comes to UN

போரை நிறுத்தாவிட்டால் கடும் வரி விதிப்பு: ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா முன்வராவிட்டால், அந்நாடு மீது மிக வலுவான முறையில் வரிகளை விதிக்க அமெரிக்கா முழுமையாகத் தயாராக உள்ளது என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபா் ட... மேலும் பார்க்க

சூடான்: 3 ஆயி​ரத்​ைதக் கடந்த காலரா உயி​ரி​ழப்பு

சூடானில் கடந்த 14 மாதமாக நடைபெறும் உள்நாட்டுப் போரில் காலரா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை மேலும் கூறிதாவது: சூடானின் கசாலா ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: ஐ.நா. அவையில் 50வது முறை கூறிய டிரம்ப்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க தனக்கு வேண்டும் என சிலர் கூறுவதாகவும், ஆனால், போர் இல்லாத உலகில்,... மேலும் பார்க்க

சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாகியிருக்கும் மனிதநேயம்..! -ஐ.நா. தலைவர் வேதனை

உலகத் தலைவர்களுக்கு ஐ.நா. தலைவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், மனிதநேயமானது இப்போது கடுமையான இடைஞ்சல் மற்றும் சொல்லொணாத் துயரம் நிறைந்ததொரு காலக்கட்டத்துக்குள் நுழைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஐ. ... மேலும் பார்க்க

நியூயார்க்கில் உலகத் தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு: தகவல் தொடர்பைத் துண்டிக்க சதி!

நியூயார்க்கில் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தகவல் தொடர்பைத் துண்டிக்க பெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.நியூயார்க்கில் விரைவில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக் கூட... மேலும் பார்க்க

ஹமாஸ் கடற்படையின் துணைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!

பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் அமைப்பின் கடற்படை துணைத் தளபதியைக் கொன்றுவிட்டதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் ... மேலும் பார்க்க