ராகுல்காந்தி ஒரு தொடர் பொய்யர்: முதல்வர் ஃபட்னவீஸ் விமர்சனம்!
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒரு "தொடர் பொய்யர்" என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னவீஸ் கூறுகையில்,
எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்தப் பொய்கள் தங்களை நம்ப வைப்பதற்காக மட்டுமே, ராகுல் காந்தி ஒரு தொடர் பொய்யர் என்று நான் முன்னே கூறியுள்ளேன். அவர் இடைவிமல் பொய்களைப் பரப்பி வருகிறார்.
ராகுல்காந்தி உண்மையைப் பேசுகிறார் என்பதை மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் திடீரென்று உணர்ந்திருப்பதைக் காண்பது எனக்கு வேதனை அளிக்கிறது என்று அவர் கூறினார்.
பாஜகவால் வாக்குகள் திருடப்பட்டன என்ற ராகுலின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த முதல்வர், தவறான தகவல்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று கூறினார். பொய்களால் கட்டப்பட்ட கோட்டை இடிந்து விழுகிறது.
மக்களின் வாக்குகளைப் பெற, மக்களிடம் சென்று அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதை அவர்கள் உணராவிட்டால், அவர்களின் பொய்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே பயன்படும்.
கர்நாடகம், மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணாவில் வாக்குகள் திருடப்பட்டதாகவும், பிகாரில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மத்தியில் ஆளும் பாஜகவால் மக்களின் வாக்குகளைத் திருட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்பட சில எதிர்க்கட்சிகளும் "வாக்குத் திருட்டு" பிரச்னையை எழுப்பியுள்ளன, மேலும் போலி வாக்காளர்களை மதிப்பிடுவதற்கு வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க தங்கள் கட்சி ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளன.
வாக்குத் திருட்டு என்று குற்றம் சாட்டும் தலைவர்கள், தங்கள் தோல்வியைப் பற்றிச் சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக, தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு ஆறுதல் அளிக்கவே அவ்வாறு செய்கிறார்கள் என்று முதல்வர் ஃபட்னவீஸ் கூறினார்.