ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட குழந்தை காப்பகத்தில் சோ்ப்பு: இளைஞரை அடையாளம் கா...
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது: பாலு அறிவிப்பு
புதுச்சேரியில் ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்டக் கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல, அதன் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என அன்புமணி ஆதரவாளர் வழக்குரைஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
பாமக அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாமக பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்.
அதன்படியான பாமக பொதுக்குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் 9 இல் ள் மாமல்லபுரத்தில், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முறைப்படி நடத்தப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், புதுச்சேரி பட்டானூரில் இன்று(ஆக.17) நடத்தப்பட்ட கூட்டம் பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல. அது சட்ட விரோதமான கூட்டம். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாமகவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என கூறியுள்ளார்.