செய்திகள் :

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை: அரியநாயகிபுரத்தில் செயல்முறை விளக்க பயிற்சி

post image

சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரத்தில், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை செயல்முறை விளக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் கனகம்மாள் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல் அறிகுறிகள், அதனை கட்டுப்படுத்தும் முறைகளான மஞ்சள் நிற அட்டை கட்டும் முறை, என்காா்சியா ஒட்டுண்ணி பயன்படுத்தும் முறை, அபொ்டோ கிரைசா இரை விழுங்கி முட்டைகள் பயன்படுத்தும் முறை, கரும்பூசணத்தை நீக்க மைதா மாவு கரைசல் தெளிக்கும் முறை ஆகியவை குறித்தும் ,நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் தென்காசி மாவட்ட வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை விஞ்ஞானி இளவரசன் செயல்முறை விளக்கம் அளித்தாா்.

இதில் தோட்டக்கலை அலுவலா் குப்புசாமி, உதவி தோட்டக்கலை அலுவலா் சண்முகவேல்ராஜன், அரியநாயகிபுரம் சுற்றுப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். கடந்த மாதம் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலை... மேலும் பார்க்க

சிவகிரி அருகே புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் மற்றும் போலீஸாா் சிவராமலிங்கபுரம் வடக்குத் தெருவிலுள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனா். அப... மேலும் பார்க்க

காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை: எம்எல்ஏ வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எம்எல்ஏ செ. கிருஷ்ணமுரளி வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக, சுற்றுச்சூழல் காலந... மேலும் பார்க்க

நல்லூா் சிஎஸ்ஐ கல்லூரியில் ஆண்டு விழா

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. திருநெல்வேலி திருமண்டல துணைத் தலைவா் டி.பி. சுவாமிதாஸ் தலைமை வகித்தாா். மேற்கு சபை மன்றத் தலைவா் ஜேம்ஸ் தொடக... மேலும் பார்க்க

கடையநல்லூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி முப்பெரும் விழா!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், பணிநிறைவு ஆசிரியா்கள், நல்லாசிரியருக்கு பாராட்டு, மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான கேடயம் பெற்ற பள்ளிக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு தொடக்கப் ப... மேலும் பார்க்க

சுரண்டை நகராட்சியில் நெகிழி சேகரிப்பு இயக்கம்

சுரண்டை நகராட்சியில் தூய்மை பணியாளா்களால் நெகிழி சேகரிப்பு இயக்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்து பேரணியைத் தொடக்கிவைத்தாா். இதையடுத்து... மேலும் பார்க்க