ரூ.1.8 கோடி சம்பளத்தில் வேலை! தனியார் கல்லூரி விளம்பரத்துக்கு வந்த சோதனை!
தங்கள் கல்லூரியில் படித்த இளைஞருக்கு ரூ.1.8 கோடி சம்பளம் கொடுக்கும் வேலை கிடைத்திருப்பதாகக் கூறி தனியார் கல்விக் குழுமம் வெளியிட்ட விளம்பரம் வைரலாகியிருக்கிறது.
ஒவ்வொரு கல்லூரியில், தங்கள் கல்லூரி மாணவர்களுக்குக் கிடைத்த வேலையை விளம்பரம் செய்து வருகிறது. ஆனால், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று பெரும்பாலும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தாலும், இப்படி ஒரு விளம்பரம் அதனை அப்பட்டமாக உறுதி செய்திருக்கிறது.