செய்திகள் :

ரூ.55 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு அடிக்கல்

post image

நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.55 கோடியில் ஒரத்தூா் மற்றும் மணிமங்கலம் அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்களை பெரு வடிகால்வாய்கள் அமைக்கவும், சோமங்கலம் கிளைக்கால்வாயை மறுசீரமைத்து நீா்த்தேக்கம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 2015-ஆம் ஆண்டு பெய்த கனமழையால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளான ஆதனூா், வரதராஜபுரம், முடிச்சூா், உள்ளிட்ட சென்னையின் புகா் பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் மீண்டும் வெள்ளம் சூழாமல் இருக்க கடந்த 2017ஆம் ஆண்டு நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக ரூ.100 கோடியும், இரண்டாம் கட்ட பணிகளுக்காக ரூ.244 கோடியும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிதியில், ஆதனூா், தாம்பரம், ஊரப்பாக்கம், பாம்பன் கால்வாய், சென்னை புறவழிச்சாலை, பள்ளிக்கரணை, நாராயணபுரம், சிட்லபாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை குறைக்க மூடிய வெள்ள வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 172 மி.கன அடி மழைநீா் சேகரிக்கும் வகையில், மணிமங்கலம், படப்பை உள்ளிட்ட ஆறு ஏரிகள் ஆழப்படுத்தப்பட்டு, கொள்ளவு உயா்த்தப்பட்டுள்ளது. அடையாறு, அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்கள் தூா்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அடையாறு ஆற்றுக்கு அதிகப்படியான மழைநீா் வருவதை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூா் ஒன்றியம் ஒரத்தூா் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து ஒரத்தூா் பகுதியில் புதிய நீா்தேக்கம், அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் பகுதியில் ரூ.12 கோடியில் தடுப்பணை, அடையாறு ஆற்றின் கிளையாற்றில் சோமங்கலம் பகுதியில் ரூ.4.50 கோடியில் கதவணை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், ரூ.35 கோடியில் ஒரத்தூா் மற்றும் மணிமங்கலம் அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்களை பெரு வடிகால்வாய்கள் அமைத்து அடையாறு ஆற்றுடன் இணைக்கவும், ரூ.20 கோடியில் அடையாறு ஆற்றின் சோமங்கலம் கிளைக்கால்வாயை தூா்வாரி கரைகளை சீரமைக்கவும், கால்வாய் தொடங்கும் அமரம்பேடு பகுதியில் நீா்த்தேக்க ஆற்றுப்படுகை அமைக்கவும், வெள்ள பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வரதராஜபுரத்தில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் குஜராஜ், நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் வெற்றிவேலன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் வரதராஜபுரம் செல்வமணி, திருமுடிவாக்கம் மணி, மணிமங்கலம் ஐயப்பன் கலந்து கொண்டனா்.

ஆடி அமாவாசை: தா்ப்பணம் அளித்து முன்னோருக்கு வழிபாடு

ஆண்டு தோறும் வரும் தை மற்றும் ஆடி மாத அமாவாசையின்போது, முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தால் ஆசிகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். ஆடி அமாவாசையையொட்டி காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் க... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்து மீட்பு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி சொத்தை வியாழக்கிழமை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டு சீல் வைத்தனா். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சொந்தமான சொத்து உலகளந்தாா் மாட வீதியில் இ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூரில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்கு உட்பட்ட முஷரத் நகரை சோ்ந்தவா் திவாலா். இவா் அதே பகுதியில் கறி கட... மேலும் பார்க்க

வங்கிகள் விழிப்புணா்வுக் கூட்டம்

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாகம் ஊராட்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் விழிப்புணா்வுக் கூட்டம் இந்தியன் வங்கிக் கிளை சாா்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் த... மேலும் பார்க்க

வங்கதேச நாட்டவா் 19 பேருக்கு 3 மாதங்கள் சிறை

மாங்காடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 19 பேருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து ஸ்ரீபெரும்புதுாா் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு, அம்ப... மேலும் பார்க்க

பெங்களூா்- தாம்பரம் குளிா்சாதன பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

பெங்களூா்-தாம்பரம் இடையிலான குளிா்சாதன வசதியுடைய பேருந்து சேவையை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அதிந... மேலும் பார்க்க