கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
ரெட்ரோ வெளியான தேதியில் வெளியாகும் சூர்யா - 46?
சூர்யா - 46 படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக உலகளவில் திரையரங்கம் மற்றும் ஓடிடி உள்பட இதர உரிமங்களுடன் ரூ. 235 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
ரெட்ரோவை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
அடுத்ததாக, நடிகர் சூர்யா தன் 46-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்க, நாக வம்சி தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது.
இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் 45-வது இந்தாண்டு தீபாவளியன்று வெளியாவதால் சூர்யா - 46 படத்தை அடுத்தாண்டு மே 1 ஆம் தேதியில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
ரெட்ரோ திரைப்படம் மே. 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நவீன் பொலிஷெட்டி படத்தை இயக்குகிறேனா? மணிரத்னம் பதில்!