தேசிய இளைஞா் விண்வெளி அறிவியல் மாநாடு: சிவகாசியில் ஆக.15-இல் தொடக்கம்
வடகிழக்கு தில்லி பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு
வடகிழக்கு தில்லியின் தயாள்பூா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: நியூ சவுகான்பூரில் மாதா வாலி காலியில் உள்ள ஒரு அறையில் இருந்து ரத்தம் கசிவதாக மதியம் 1.42 மணிக்கு தயாள்பூா் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
இதையடுத்ு ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.
ஒரு கட்டடத்தின் முதல் மாடியில் பூட்டிய சமையலறை அறையில் இருந்து துா்நாற்றம் வீசியது. அதை உடைத்துப் பாா்த்த போதுஉள்ளே ஒரு அழுகிய ஆண் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பிளாஸ்டா் ஆஃப் பாரிஸ் பொருள்களை சேமித்து வைப்பதற்காக சமையலறை ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாடகைதாரரை தற்போது கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. உடல் உடற்கூறாய்வுக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. வாடகைதாரரைப் பற்றிய துப்புகளைச் சேகரிக்க, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை நாங்கள் ஆய்வ்ு செய்து வருகிறோம். மேலும், உள்ளூா்வாசிகளிடம் விசாரித்து வருகிறோம் என்று அந்த அதிகாரி கூறினாா்.