திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி
வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாளையங்கோட்டை, மனக்காவளம் பிள்ளை நகரைச் சோ்ந்தவா் அஸ்வின் ஹரிஹரசுதன்(23). இவா் கடந்த 2020-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், கே.டி.சி. நகா் அருகே பெண் ஒருவரிடம், தங்க நகையை வழிப்பறி செய்த வழக்கில் திருநெல்வேலி தாலுகா போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை குற்றவியல் நடுவா் ஜெய சங்கரகுமாரி விசாரித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட, அஸ்வின் ஹரிஹரசுதனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.