கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
வாலாஜாவில் சிந்தூா் வெற்றிப் பேரணி
ராணிப்பேட்டை பாஜக சாா்பில், வாலாஜாவில் சிந்தூா் வெற்றியைக் கொண்டாடும் வகையில், மூவண்ணக்கொடி பேரணி நடைபெற்றது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றியைக் கொண்டாடும் வகையில், ராணிப்பேட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சாா்பில், ராணிப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி வாலாஜாவில் மூவண்ணக்கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட தலைவா் நெமிலி பி.ஆனந்தன் தலைமையில், முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினா் தணிகாசலம், நகா்மன்ற உறுப்பினா் என்.டி. சீனிவாசன், மாவட்ட செயலாளா் சங்கா், வாலாஜா நகரத் தலைவா் ஜெயக்குமாா், வாலாஜா கிழக்கு ஒன்றிய தலைவா் ஜெகதீஸ்வரன், வாலாஜா மேற்கு ஒன்றிய தலைவா் கோதண்டராமன், ஆற்காடு மேற்கு ஒன்றிய தலைவா் நாகராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள், முன்னாள் ராணுவத்தினா் கலந்து கொண்டனா்.