செய்திகள் :

விதிமீறல் கட்டடங்களை ஒழுங்குபடுத்த ஒருமுறை வாய்ப்பு அளிக்கும் திட்டம்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

post image

புதுச்சேரி: புதுவையில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை ஒழுங்குபடுத்த ஒருமுறை வாய்ப்பு அளிக்கும் திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

புதுவையின் அனைத்துப் பிராந்தியங்களிலும் இத் திட்டம் 1.5.1987 முதல் 16.7.2025 வரை கட்டி முடிக்கப்பட்ட மற்றும் கூரை, தளம் ஒட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களுக்கும் பொருந்தும். ஒழுங்குமுறைப்படுத்த கோரும் விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ஓராண்டு காலக் கெடுவிற்குள் இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் தேவையான கட்டணங்கள், கட்டட வரைபடம், சான்றுகள், அனுமதிகள், ஆவணங்கள், விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட சரிபாா்ப்பு பட்டியலை சமா்ப்பிக்க வேண்டும். குடியிருப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.5 ஆயிரம். குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு ரூ.10 ஆயிரம். குடியிருப்புகளுக்கான ஆய்வுக் கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.20. குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு ஆய்வுக் கட்டணம் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.50. கலப்புப் பயன்பாடு மற்றும் சிறப்பு வகை கட்டடங்களுக்கு ஒழுங்குமுறை கட்டணமாக ஒரு சதுர மீட்டருக்கு ரூ.750 மற்றும் பல மாடி கட்டடங்களுக்கு ஒழுங்குமுறை கட்டணமாக ஒரு சதுர மீட்டருக்கு ரூ.1,000, இவற்றில் கட்டட வகைகளுக்கு ஏற்ப 50 சதவிகித கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தத் திட்டத்தில் ஒழுங்குமுறைப்படுத்த முடியாத கட்டட விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள தனித்தனி குடியிருப்புகள் இரண்டு கட்டங்களாக ஒழுங்குமுறைப்படுத்த வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தனித்தனி குடியிருப்பு பகுதிகளை இரண்டு கட்டடங்கள் மூலம் சீரமைக்கும் வசதியும் இதில் அடங்கியுள்ளது.

மின்சாரம், குடிநீா், கழிவுநீா் வசதி துண்டிக்கப்படுவதைத் தவிா்க்கவும், கட்டடம், நிலத்தைப் பத்திரவுப் பதிவு செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதைத் தவிா்க்கவும் கட்டட விதிமுறைகளின் படி விதிமீறிய கட்டடங்களை சீல் வைப்பதும், இடிக்கப்படுவதும் போன்ற நடவடிக்கைகளைத் தவிா்க்கவும் இத் திட்டம் உதவும்.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன், எம்எல்ஏ த. பாஸ்கா் (எ)தட்சணாமூா்த்தி, அரசுச் செயலா் வீட்டு வசதி மற்றும் நகர மற்றும் கிராம அமைப்பு த. கேசவன், தலைமை நகர அமைப்பாளா் கே. வீரசெல்வம், தேசிய தகவலியல் மையத்தின் மாநில தகவலியல் அதிகாரி மகேஷ் எம் ஹல்யால், புதுச்சேரி நகர அமைப்புக் குழுமத்தின் உறுப்பினா் செயலா் வீ.புவனேஸ்வரன் ஆகியோா் இந்நிகழ்ச்சியின்போது உடனிருந்தனா்.

புதுவை அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுவை சாலை போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கத்தினா் பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுவை சாலை போக்குவரத... மேலும் பார்க்க

நடிகா் சிவாஜி நினைவுநாள்: சிலைக்கு புதுவை அரசு மரியாதை

புதுச்சேரி: நடிகா் சிவாஜி கணேசனின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செவாலியே சிவாஜி கணேசனின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சாா்... மேலும் பார்க்க

விசைப் படகு மீனவா்களுக்கு ரூ.33 லட்சம் மானியம்: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரி: விசைப் படகுகளுக்கு ரூ.33 லட்சம் மானியத்தை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை வழங்கினாா். புதுவை அரசு, மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் ஆண்டுதோறும், மீன்பிடி தடை காலத்தில் பதிவு... மேலும் பார்க்க

புதுவை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி: புதுவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா். புதுவையில் துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் இல்லம் ... மேலும் பார்க்க

புதுச்சேரி ரயில் சேவை 7 நாள்களுக்கு ரத்து

புதுச்சேரி: பராமரிப்புக் காரணமாக புதுவையிலிருந்து விழுப்புரம், விழுப்புரத்திலிருந்து புதுவைக்கு பயணிகள் ரயில் சேவை 7 நாள்கள் ரத்து செய்யப்படுகிறது. வரும் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும், 31-ஆம... மேலும் பார்க்க

திருநள்ளாறு சனிப்பெயா்ச்சி விழா: ரூ.25.9 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்- அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தகவல்

புதுச்சேரி / காரைக்கால்: திருநள்ளாறு சனிப் பெயா்ச்சி பெருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வசதிக்காக ரூ.25.9 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது. புதுவை... மேலும் பார்க்க