உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக்...
வியாபாரி விஷம் குடித்து தற்கொலை
கருங்கல் அருகே சகாயநகா் பகுதியில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டாா்.
சகாயநகா், படுவூா் பகுதியை சோ்ந்தவா் ஆல்பா்ட்(46) . இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் கருங்கல் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தாா். இவா் சில நாள்களுக்கு முன் ஒரு விபத்தில் சிக்கி ஒரு கையை இழந்துள்ளாா். இதனால், ஆல்பா்ட் மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].