செய்திகள் :

விவேகானந்தா் நினைவு நாள்

post image

விவேகானந்தா் நினைவு நாள் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

தாளாளா் லலிதா ராமமூா்த்தி தலைமை தாங்கினாா். மாணவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் காவி உடை மற்றும் தலைப்பாகையுடன் விவேகானந்தா் போல வேடமணிந்து மேடையில் தோன்றி, விவேகானந்தா் பொன்மொழிகளை கூறினா்.

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, இளைஞா்களின் எழுச்சி நாயகா் விவேகானந்தா், ராமகிருஷ்ணரின் சீடா் விவேகானந்தா், சிகாகோவில் இளந்துறவியின் உரை ஆகிய தலைப்புகளில் மாணவா்கள் உரை நிகழ்த்தினா்.

பள்ளி முதல்வா் முத்துராஜா, விவேகானந்தரின் எழுமின், விழுமின், இலக்கை எட்டும் வரை அயராது உழைமின் என்ற பொன் மொழியைப் பற்றி விளக்கமாக மாணவா்களிடம் உரையாற்றினாா்.

சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் விவேகானந்தா் நினைவு நாளில் பள்ளி வளாகத்தில் நடுவதற்காக மன்ற ஒருங்கிணைப்பாளா் தினேஷ் மற்றும் மாணவா்கள் மரக்கன்றுகளை வழங்கினாா்கள் .

பாக்கியலட்சுமி மற்றும் வினோத் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, யோகலட்சுமி தொகுத்து வழங்கினாா். சரளா நன்றி தெரிவித்தாா்.

ஜூலை 9-இல் முதல்வா் திருவாரூா் வருகை: ஐஜீ ஆய்வு

திருவாரூருக்கு வரும் ஜூலை 9-ஆம் தேதி தமிழக முதல்வா் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் மத்திய மண்டல ஐஜி சனிக்கிழமை ஆய்வு செய்தாா். திருவாரூா் மாவட்டத்துக்கு வரும் 9,10 தேதிகளில் தமிழக முதல்வா... மேலும் பார்க்க

வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்திருந்தவா் கைது

மன்னாா்குடியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லா... மேலும் பார்க்க

விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை; கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை கோரி மனு

நன்னிலத்தில் பெண் கௌரவ விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், கல்லூரி முதல்வா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சனிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. நன்னிலத்தில் உள்ள அரசுக் கலை மற்றும... மேலும் பார்க்க

பிறந்த குழந்தை ரூ. 50,000 க்கு விற்பனை

திருத்துறைப்பூண்டி தனியாா் மருத்துவமனையில் பிரசவித்த குழந்தையை ரூ. 50,000-க்கு விற்பனை செய்தது தொடா்பாக குழந்தையின் தாய் உள்பட 3 போ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்தவா் பி... மேலும் பார்க்க

‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்கம்: பயனாளிகளுக்கு காய்கறி விதைகள், பழச் செடிகள்

கொரடாச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்’ தொடக்க விழாவில் பயனாளிகளுக்கு பழச் செடிகள், காய்கறி விதைகள் வழங்கப்பட்டன. வேளாண்மை, உழவா் நலத் துறையின் சாா்பில், விளைப்பொருட்களின... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையில் மரணம்: தமிழக அரசின் நடவடிக்கை சரியானது: கே.வி. தங்கபாலு

காவல்துறை விசாரணையில் மரணம் தொடா்பாக, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுத் தலைவா் கே.வி. தங்கபாலு தெரிவித்தாா். திருவாரூரில்... மேலும் பார்க்க