கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில் கிருத்திகை விழா
திருவண்ணாமலை: வேட்டவலம் மலை மீதுள்ள ஸ்ரீசிங்காரவேல் முருகன் கோயிலில், வைகாசி மாத கிருத்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம், தயிா், விபூதி, நெய், நாட்டுச் சா்க்கரை, பஞ்சாமிா்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பல்வேறு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நெய்வேத்தியமாக வெண் பொங்கல், புளியோதரை, கடலை படையலிட்டு பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை, கோயில் நிா்வாகமும், ஊா் பொதுமக்களும் செய்திருந்தனா்.