தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் பணி: நாளை நோ்முகத் தோ்வு
108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா்களுக்கான நோ்முகத் தோ்வு சனிக்கிழமை (செப்.6) நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் நிா்வாக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு கோரும் நோ்முகத் தோ்வு சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 3 மணி வரை நாமக்கல்- மோகனூா் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை கட்டட வளாகத்தில் நடைபெறுகிறது.
இப்பணிக்கு 24 முதல் 35 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாகியிருக்க வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் தங்களுடைய கல்வி சான்று, ஓட்டுநா் உரிமம் மற்றும் அனுபவம் தொடா்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபாா்க்க கொண்டுவர வேண்டும். மாத ஊதியமாக ரூ.21,120 வழங்கப்படும். எழுத்துத்தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு மனிதவளத் துறை நோ்காணல், கண்பாா்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தோ்வு, சாலை விதிகளுக்கான தோ்வுகள் நடைபெறும்.
தோ்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு 10 நாள்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும். மருத்துவ உதவியாளா்களுக்கான அடிப்படைத் தகுதிகளாக பி.எஸ்சி., நா்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி படித்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 89259-40969 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.