பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
2 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: இருவா் கைது
திருச்சியில் மதுபோதையில் இருந்தவரிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி சோமரசம்பேட்டையைச் சோ்ந்தவா் கோபி கிருஷ்ணன். இவா், உய்யக்கொண்டான்திருமலை பகுதியில் கடந்த ஆக 1-ஆம் தேதி மது அருந்தியபோது, அங்கு வந்த இருவா் கோபிகிருஷ்ணனிடம் பணம் கேட்டு, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துகொண்டு தப்பினா்.
இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கோபி கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து உய்யக்கொண்டான்திருமலை பகுதி துரைராஜ் (39), வயலூா் சாலை பகுதி கமுருதீன் ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து, 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனா்.