செய்திகள் :

27 ஆண்டுகளில் முதல் முறை... தொடரை முழுமையாக கைப்பற்றுமா தென்னாப்பிரிக்கா?

post image

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்க அணி முழுமையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையே லார்ட்ஸில் நேற்று (செப்டம்பர் 4) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்க அணி கடந்த 1998 ஆம் ஆண்டு கடைசியாக இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்றிருந்தது. அதன் பின், 27 ஆண்டுகளில் முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் தற்போது ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து வென்றிருந்தது. அதன் பின், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி இதுவரை வென்றதில்லை.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (செப்டம்பர் 7) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

There is anticipation among fans that the South African team will completely conquer the ODI series against England.

இதையும் படிக்க: ஓய்விலிருந்து மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் பிரபல நியூசி. வீரர்!

லபுஷேன் ஹாட்ரிக்: கோப்பையை வென்றது ரெட்லேண்ட்!

மார்னஸ் லபுஷேனின் அசத்தலான பந்துவீச்சினால் அவரது ரெட்லேண்ட் அணி இறுதிப் போட்டியில் வென்றது. கேஎஃப்சி டி20 மேக்ஸ் தொடரில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேன்ட் கிரிக்... மேலும் பார்க்க

3 ஆண்டுக்குப் பின் லாகூரில் முதல் டெஸ்ட்! பாகிஸ்தான் செல்லும் தென்னாப்பிரிக்க அணி!

நடப்பு சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் லாகூரில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறது.உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் முதல் முறையாக ஆஸ்திரேலியா... மேலும் பார்க்க

2-ஆவது டி20: ஜிம்பாப்வேயிடம் இலங்கை மோசமான தோல்வி!

இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 17.4 ஓவர்களில் அனைத்து... மேலும் பார்க்க

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 80 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (செப்டம... மேலும் பார்க்க

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

இந்திய அணியில் போட்டியை வென்று கொடுப்பவர் ரிஷப் பந்த் மட்டுமே என இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரோலண்ட் புட்ச்சர் கூறியுள்ளார்.இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்... மேலும் பார்க்க

பாகிஸ்தானிடம் தோற்றால் பொறுமையை இழந்துவிடுவேன்: வீரேந்திர சேவாக்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் தனது பொறுமையை இழந்துவிடுவேன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்கா... மேலும் பார்க்க