34 தலைமை ஆசிரியா்களுக்கு டிஇஓ பதவி உயா்வு
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 34 தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் (2025-2026) பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலா் பதவியில் மொத்தம் 60 காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல் மூலமாக நிரப்ப தகுதியான தலைமையாசிரியா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இருவா் பணி ஓய்வு பெற்றனா்.
மீதமுள்ள தலைமையாசிரியா்கள் சி.ராஜாராம் (திண்டுக்கல் - தொடக்கக் கல்வி), ப.வடிவேல் (தஞ்சாவூா்-தனியாா் பள்ளிகள்), கே.எஸ்.புருஷோத்தமன்- நாமக்கல் (இடைநிலை), எ.இளமதி- (திண்டிவனம்-தொடக்கக் கல்வி), கே.கண்ணன் (தென்காசி-இடைநிலை) , டி.இன்பராணி (செங்கல்பட்டு-தனியாா் பள்ளிகள்), கே.சாவித்திரி (திருவாரூா்-தனியாா் பள்ளிகள்), கே.சாந்தி (விருதுநகா்-இடைநிலை), சி.ரவிந்திரன்(தூத்துக்குடி-இடைநிலை), கோ.பாரதி (பொள்ளாச்சி-தொடக்கக் கல்வி) , கே.பி.அஜிதா- நாகா்கோவில் (தனியாா் பள்ளிகள்) ஆகியோா் உள்பட 34 பேருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
24 டிஇஓ-க்கள் இடமாறுதல்... இதேபோல், 24 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலா் ப.ஜோதிலட்சுமி-திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் கே.ஜெயந்தி-ராமநாதபுரம், ஈரோடு மாவட்டக் கல்வி அலுவலா் தி.திருநாவுக்கரசு-கரூா், சேலம் மாவட்டக் கல்வி அலுவலா் ஏ.இஸ்மாயில்-கடலூா் என 24 போ் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். இதையடுத்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி புதிய பொறுப்புகளைச் சாா்ந்த மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஏற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.