4 மாதங்களில் 25 கிலோ எடை குறைத்த பெண்ணின் 10 டிப்ஸ் இதோ...!
உடல் எடை குறைப்பு என்பது இன்று பெரும்பாலானோருக்கு சவாலான காரியமாகத்தான் இருக்கிறது. மிகவும் கடினமான உடற்பயிற்சி செய்தால்தான் அல்லது உணவைக் குறைதாலோ, தவிர்த்தாலோதான் உடல் எடையைக் குறைக்க முடியும் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது.
ஆனால் தீவிர கட்டுப்பாடுகளைவிட எளிய முறையில் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்து சாதாரணமாக உடல் எடையைக் குறைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிவிரைவான மாற்றங்களைவிட நிலையான மெதுவான மாற்றங்களே உடல் எடையைக் குறைக்க உதவும் என்கின்றனர்.
உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அமாகா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உடல் எடையைக் குறைக்கும் 10 வழிமுறைகளைப் பகிர்ந்துள்ளார். இவர் 4 மாதங்களில் 25 கிலோ உடல் எடையைக் குறைத்தவர்.
1. நீங்கள் பசியில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது உணவைத் தவிர்க்க வேண்டாம். ஆனால் குறைவான கலோரி அளவில் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
2. நீங்கள் சாப்பிடும் உணவு பெரும்பாலும் அதிக புரதம், அதிக நார்ச்சத்துள்ள உணவுகளாக இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இது பசியைக் கட்டுப்படுத்துவதுடன் அதிக கலோரிகளை எரிக்கும். 80% புரதம், நார்ச்சத்துள்ள உணவுகளும் 20% உங்களுக்குப் பிடித்த உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.
சிக்கன், மீன், முட்டை, பீன்ஸ், ஆட்டு இறைச்சி, கெட்டித் தயிர் இத்துடன் காய்கறிகளை எடுத்துக்கொள்ளலாம்.
3. நடைப்பயிற்சி கொழுப்பை எளிதில் கரைக்கும். ஒரு நாளைக்கு 8,000 முதல் 10,000 அடிகள் நடக்க வேண்டும்.
4. சர்க்கரைதான் உடல் பருமனுக்கு உண்மையான எதிரி. அதனை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். மேலும் சோடா, ஜூஸ், பேக்கரி உணவுகளைக் குறைத்தால் உடல் எடையில் வித்தியாசம் ஏற்படுவதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்.
5. தீவிரமான ஓட்டம் உள்ளிட்ட கார்டியோ பயிற்சிகளைவிட எடை தூக்குவது கொழுப்பை வேகமாகக் கரைக்கும்.
6. தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது அவசியம். ஏனெனில் சரியான தூக்கம் இல்லாதது உங்கள் மன அழுத்த அளவை அதிகரித்து அதிக பசியைக் கொடுக்கிறது. மேலும் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கிறது.
7. உணவுக்கு முன்னும் பின்னும் தண்ணீர் அருந்துவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இது அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துவதற்கு முக்கியமானதாக அமையும். வயிறு நிரம்புவதால் உங்களால் அதிகம் சாப்பிட முடியாது.
8. தீவிரமாக எதிலும் ஈடுபட வேண்டாம். நிலையாக தொடர்ச்சியாக எளிமையான பயிற்சிகளைச் செய்வதே போதுமானது. உடற்பயிற்சி, உணவு பழக்கவழக்கத்தை தினமும் கடைப்பிடியுங்கள்.
9. நேர்மை அவசியம். உணவு பழக்கவழக்கங்களை சரியாக நேர்மையாக கடைப்பிடியுங்கள். ஒரு வாரத்திற்கு எவ்வளவு உடல் எடை குறைந்துள்ளது என்று கவனம் செலுத்துங்கள்.
10. இறுதியாக உடல் எடையைக் குறைப்பதில் பொறுமை மிகவும் அவசியம். உடல் எடையைக் குறைக்கும் செயல்முறையை நீங்கள் நம்ப வேண்டும். சரியாக அதனை செயல்படுத்தி முடிவுகளையும் நீங்கள் உணரும்போது அதனைத் தொடர்வீர்கள். உடல் எடை குறைப்பு பயிற்சிகளை முதலில் ஒரு மாதம் கடைப்பிடிக்க வேண்டும் குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதனை அப்படியே நீட்டித்துக்கொள்ளுங்கள். இறுதி முடிவுகள் கிடைக்கும் வரை பொறுமையாக இருங்கள்.
யாராலும் எல்லா நாள்களிலும் சரியாக இருக்க முடியாதுதான். 100% சரியாக இருக்க யாரும் முயற்சி செய்ய வேண்டும். மாதத்தில் ஒரு நாள் அல்லது எப்போதாவது வழிமுறைகளை மீறலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
10 tips for weight loss from a woman who lost 25 kg in 4 months
இதையும் படிக்க | வார இறுதி நாள்களை வீணாக்குகிறீர்களா? இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!