எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்
5 டி20, 3 ஒருநாள்..! இந்திய அணியின் இங்கிலாந்து தொடர் அட்டவணை வெளியீடு!
இந்தியா - இங்கிலாந்து இடையிலான அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20, ஒருநாள் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மேலும், இந்திய மகளிரணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், அடுத்தாண்டு இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் 19 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்திய ஆடவர் அணியைத் தொடர்ந்து இந்திய மகளிரணியும் 3 டி20 போட்டிகள் மற்றும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

டி20 தொடருக்கான அட்டவணை
முதலாவது டி20 போட்டி - துர்ஹாம் - ஜூலை 1
2-வது டி20 போட்டி - மான்செஸ்டர் - ஜூலை 4
3-வது டி20 போட்டி - நாட்டிங்காம் - ஜூலை 7
4-வது டி20 போட்டி - பிரிஸ்டல் - ஜூலை 9
5-வது டி20 போட்டி - சௌதாம்ப்டன் - ஜூலை 11
ஒருநாள் தொடருக்கான அட்டவணை
முதலாவது ஒருநாள் போட்டி - பர்மிங்காம் - ஜூலை 14
2-வது ஒருநாள் போட்டி - கார்டிப் - ஜூலை 16
3-வது ஒருநாள் போட்டி - லார்ட்ஸ் - ஜூலை 19
மகளிரணி டி20 தொடருக்கான அட்டவணை
முதலாவது டி20 போட்டி - செல்ஸ்போர்டு - மே 28
2-வது டி20 போட்டி - பிரிஸ்டல் - மே 30
3-வது டி20 போட்டி - டௌடன் - ஜூன் 2
ஒரேயொரு டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
Indian men's team to play 5 T20s, 3ODIs in England in 2026
இதையும் படிக்க :ஆசியக் கோப்பை: அமீரகத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
5⃣ T20Is. 3⃣ ODIs
— BCCI (@BCCI) July 24, 2025
England
Fixtures for #TeamIndia's limited over tour of England 2026 announced #ENGvINDpic.twitter.com/Bp8gDYudXW