700 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபல தொடரான சிறகடிக்க ஆசை 700 நாள்களுக்கு மேல் ஒளிபரப்பாகி புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மற்ற தொடர்களின் டிஆர்பி புள்ளிகளைவிட சிறகடிக்க ஆசை தொடர் அதிகம் டிஆர்பி புள்ளிகளைப் பெற்று வாரந்தோறும் முதலிடத்தை தக்கவைத்து வருகிறது.
இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.
இத்தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு முக்கியத்துவம் பெறும் (Prime Time) நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
கூட்டு குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளை மையப்படுத்தி நகைச்சுவை கலந்து விறுவிறுப்புடன் இத்தொடர் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
விகடன் நிறுவனம் தயாரிக்கும் இத்தொடரை எஸ். குமரன் இயக்கி வருகிறார். இத்தொடரில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, இயக்குநர் ஆர். சுந்தரராஜன், அனிலா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கடந்த 2023 ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை தொடர் 700 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி சாதனை படைத்துள்ளது.
இது குறித்து இத்தொடரின் நாயகன் வெற்றி வசந்த் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”சிறகடிக்க ஆசை தொடர் 700 எபிசோடுகள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு குடுத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எங்கள் குழுவின் சார்பாக "நன்றிகள் பல”” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: டொவினோ தாமஸைப் பாராட்டியதால் தன் மேலாளரைத் தாக்கிய உன்னி முகுந்தன்!