Rain Alert: "நீலகிரி உட்பட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்" - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாகவே கோடை மழை தீவிரமடைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது.
குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், அங்கு குறிப்பிட்ட பகுதிகளில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.








மேலும், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆங்காங்கே சாலைகளில் விழுந்த ராட்சத மரங்களை அகற்றும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கிறது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 26, 2025
இது குறித்து வானிலை அறிக்கையில், "நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மட்டும் காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்." என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.