செய்திகள் :

Surrender: 'மன்சூர் அலிகான் சாரின் படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன், அவரிடம் இருந்து...'- தர்ஷன்

post image

கௌதம் கணபதி இயக்கத்தில், பிக் பாஸ் தர்ஷன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சரண்டர்’.

அப்பீட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர்கள் லால், சுஜீத் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று( ஜூலை 23) சென்னையில்  நடைபெற்று இருக்கிறது.

சரண்டர்
சரண்டர்

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தர்ஷன், “ ஆரம்பத்தில் இருந்தே கௌதம் சார் என்னை ஒரு பெரிய ஹீரோ மாதிரிதான் நடத்தினார்.

முதல் நாள் படப்பிடிப்பில் அவரே என்னை தேடி வந்து காட்சிகளைச் சொன்னார். படப்பிடிப்பின் கடைசி நாள் வரைக்கும் என்னை அப்படிதான் நடத்தினார்.

இலங்கையில் இருந்தாலும் மன்சூர் அலிகான் சாரின் படங்களைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

இந்தப் படத்தில் உள்ள சண்டைக் காட்சிகள் அதிக அளவில் பேசப்படும். சில விஷயங்கள் நடக்கும்போதுதான் தெரியும் யார் உண்மையான ப்ரெண்ட்ஸ், யார் உண்மையான ப்ரெண்ட்ஸ் இல்லை என்று.

சரண்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் மன்சூர் அலிகான்
சரண்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் மன்சூர் அலிகான்

அந்தவகையில் நான் சென்னைக்கு வந்ததில் இருந்து என்னை சிலர் நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள்.  அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் படத்திற்கு எல்லோரும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறோம். இந்தப் படம் நிச்சயமாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்று கூறியிருக்கிறார்.     

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

What to watch - Theatre: தலைவன் தலைவி, மாரீசன், Hari Hara Veera Mallu, Fantastic 4; இந்த வார ரிலீஸ்!

தலைவன் தலைவி (தமிழ்)விஜய் சேதுபதி, நித்யா மெனன் - தலைவன் தலைவிபாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தலைவன் தலைவி'. புரோட்டோ கடை வ... மேலும் பார்க்க

'கேப்டன் பிரபாகரன்' ரீ- ரிலீஸ் தேதி அறிவிப்பு; இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பகிர்ந்த நினைவுகள்

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100வது திரைப்படமான இது அடுத்த மாதம் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்படுகிறது. இப்படத்... மேலும் பார்க்க

Karuppu: 'சுடச் சுட தீபாவளிக்குக் கொடுக்க ட்ரை பண்றோம்' - பட ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. 'கட்சி சேர', 'ஆச கூட' போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய... மேலும் பார்க்க

"என்னைச் சிரிக்கவும், சிந்திக்கவும், ரசிக்கவும் வைத்தது" - 'மாரீசன்' படத்தைப் பாராட்டிய கமல் ஹாசன்

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலு, பஹத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' திரைப்படம் வரும் ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயா... மேலும் பார்க்க

Vaaheesan: "வேடன் எனக்கு அனுப்பிய புலி எமோஜி மூலமாகதான் அவருடைய ஈழதன்மை புரிந்தது" - வாகீசன் பேட்டி

ஒரு ரிலீஸ் மூலமாக வைரலாகி இன்று உலகம் முழுக்க தன்னையும் தன் பாடல்களைப் பரிச்சயமாக்கி இருக்கிறார் வாகீசன். அந்த ட்ரெண்டைத் தொடர்ந்து தமிழில் தன்னுடைய ஆட்டத்தைத் தொடங்கிவிட்டார். இதோ இவரின் வரிகளில் இப்... மேலும் பார்க்க