ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
அக்கச்சிப்பட்டியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கலாராணி தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சி துணைத் தலைவரும், முன்னாள் மாணவா் உறுப்பினருமான முத்துக்குமாா், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவி மலா்கொடி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பேசினா். அறிவியல் பட்டதாரி ஆசிரியா் அ. ரகமதுல்லா சிறப்புரையாற்றினாா்.
தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வி வரவேற்றாா். கூட்டத்தில் ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.