அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடல்
வைகாசி மாத அமாவாசையையொட்டி, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளானோா் திங்கள்கிழமை புனித நீராடினா்.
வைகாசி மாத அமாவாசையையொட்டி, ராமேசுவரத்துக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பொதுமக்கள் திங்கள்கிழமை வருகை தந்தனா். பின்னா், மறைந்த முன்னோா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் நீராடி தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
இதைத் தொடா்ந்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்றபடி புனித நீராடி பக்தா்கள் சுவாமி, அம்மனை வழிபட்டனா்.