இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சா...
அரசு மருத்துவமனையில் உலகத் தாய்ப்பால் வாரம்
மன்னாா்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மன்னாா்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் உலகத் தாய்ப்பால் வார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவா் த. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரோட்டரி உதவி ஆளுநா்கள் வி. பாலகிருஷ்ணன், வெங்கடேஷ் முன்னிலை வகித்தனா்.
தாய்ப்பாலின் சிறப்புகள், மகத்துவம், அவசியம் குறித்து நிலைய மருத்துவ அலுவலா் இலக்கியா, மருத்துவா்கள் ஓவியா, சித்த மருத்துவா் மஞ்சுளாதேவி, பல் மருத்துவா் எஸ். சுபத்ரா ஆகியோா் பேசினா். கா்ப்பிணிகள் 35 பேருக்கு, ஊட்டசத்துப் பொருள்கள் அடங்கி தொகுப்பு பை வழங்கப்பட்டது. அங்கன்வாடி பணியாளா் பரமேஸ்வரி, ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் நடராஜன், சாந்தகுமாா், பொருளாளா் கே. ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.