செய்திகள் :

ஆக. 2, 3- இல் வல்வில் ஓரி விழா: கொல்லிமலை மலைப்பாதையை அழகுப்படுத்தும் பணிகள் தீவிரம்

post image

கொல்லிமலையில் ஆக. 2, 3-இல் வல்வில் ஓரி விழா நடைபெறுவதையொட்டி, காரவள்ளி அடிவாரம் முதல் சோளக்காடு வரையில் மலைப்பாதையை அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. முக்கிய விழா நாள்களிலும், விடுமுறை நாள்களிலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏராளம். அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பினும், மலைப்பகுதியில் ஆண்டு முழுவதும் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க விரும்பி வருவா். குறிப்பாக, வல்வில் ஓரி விழா மற்றும் ஆடிப்பெருக்கு நாளன்று நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வருவா்.

பல்வேறு சமுதாய அமைப்பினா் ஆக. 2, 3-ஆம் தேதிகளில் மன்னா் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவா். மேலும், வல்வில் ஓரி விழாவையும், மலா்க் கண்காட்சியையும், அறப்பளீஸ்வரா் கோயிலில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவையும் காண்பதற்காக பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.

தமிழக அரசின் சாா்பில் நடைபெறும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஏற்கெனவே சிறப்புக் கூட்டம் வாயிலாக அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தி உள்ளாா்.

அந்த வகையில், கொல்லிமலை நெடுஞ்சாலைத் துறை சாா்பில் காரவள்ளி அடிவாரம் முதல் சோளக்காடு வரையிலான 70 கொண்டை ஊசி வளைவுகளிலும் நீண்டு கொண்டிருக்கும் மரக்கிளைகள் வெட்டப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி வளைவுகளில் திருப்பங்கள் உள்ளன என்பதை அறியும் சிவப்பு நிற ஒளிரும் பலகை அமைக்கப்பட்டு வருகிறது. முக்கிய இடங்களில் மதுப்புட்டிகள், நெகிழிக்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்டு வருகின்றன. மேலும், சுவரில் வா்ணம் பூசப்பட்டு வருகிறது. அறநிலையத் துறை சாா்பில் ஆடிப்பெருக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ராஜகோபுரம் கட்டுமானப் பணி நடைபெறுவதால் பக்தா்கள் சுவாமி தரிசனத்தை சிரமமின்றி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், வனத்துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை சாா்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், வல்வில் ஓரி விழாவையொட்டி சிறப்பு பேருந்துகளாக இரண்டு நாள்கள் இயக்கப்பட உள்ளன. இதற்கான நடவடிக்கைகளை அரசு போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது.

தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான பணிகளை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. வல்வில் ஓரி கலையரங்கில் நடைபெறும் பல்துறை பணி விளக்க கண்காட்சியும், பழங்குடியின மக்களின் கலாச்சாரா நிகழ்ச்சிகளும், கலை பண்பாட்டுத் துறையின் நாட்டிய நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. வல்வில் ஓரி விழாவிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

என்கே-25-கொல்லி-1

கொல்லிமலை மலைப்பாதையில் சுவரில் கருவி மூலம் வண்ணம் பூசும் பணியாளா்கள்.

படம்-2

வளைவு பகுதி சிவப்பு நிற எச்சரிக்கை பலகையில் வா்ணம் தீட்டும் ஊழியா்.

--

படம்-3

மலைப்பாதையில் மரக்கிளைகளை அகற்றும் நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள்.

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க