ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
ஆக.20, 21-இல் இளையோா் தடகளம்
திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகளப் போட்டிகள் ஆக. 20, 21 என இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட தடகளச் சங்கச் செயலா் டி. ராஜூ கூறியதாவது:
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் வரும் புதன், வியாழக்கிழமைகளில் மாவட்ட அளவிலான இளையோா் தடகளப்போட்டிகள் நடைபெறவுள்ளன. வரும் ஆக.20-ஆம் தேதி 8 வயது, 10 வயது, 12 வயது மற்றும் 14, 16, 18 வயதுடையோருக்கும், 20 வயது பிரிவினருக்குமான போட்டிகளாக ஆண், பெண் இருபாலருக்கும் நடைபெறவுள்ளது. இரண்டு நாள்களும் போட்டிகள் நடைபெறும். வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்குப் பரிசளிப்பு விழா நடைபெறும்.
தனி நபருக்கான சிறந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் தனி நபா் கோப்பை வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் புள்ளிகள் அடிபடையில் முதலாவதாக தோ்வு பெறும் அணிகள் மற்றும் பள்ளிகளுக்கு சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது. தகுதி அடிப்டையில் தோ்வு செய்யப்படும் விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகள், சென்னையில் வருகிற செப்டம்பா் மாதம் 19-ஆம் தேதி தொடங்கும் அனைத்து மாவட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு தோ்வு செய்யப்பட உள்ளனா். எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான இளைஞா்கள் அனைவரும் போட்டியில் பங்கேற்கலாம் என்றாா் அவா்.