ஆசனூா் மலைக் கிராமங்களில் ரூ.25 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்ட பணிகள்
ஆசனூரில் மலைக் கிராமங்களில் ரூ.25 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் மலைப் பகுதியில் பவானிசாகா் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து ரூ.25 மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி தலைமை தாங்கினாா்.
முன்னதாக ஆசனூரில் புதியதாக அமைக்கப்பட்ட நியாயவிலைக் கடையை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து கோட்டாடை மலைக்கிராமத்தில் பேருந்து நிழற்குடை, கோ்மாளம் ஜேஎஸ்ஆா் புரத்தில் குடிநீா் தொட்டி, கோ்மாளத்தில் பிளாஸ்டிக் தொட்டி அமைத்து ஆழ்துளைக் கிணறுக் குழாய் அமைத்தல் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜையை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் ஆசனூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் சுப்பிரமணியம், ஆசனூா் கூட்டுறவு சங்க முன்னாள் துணைத் தலைவா் மணி, புதுக்குய்யனூா் அதிமகு ஊராட்சி செயலாளா் சின்ன பொன்னான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.