செய்திகள் :

ஆடிப்பூரம்: பெருமாள், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

post image

சேலம்: ஆடிப்பூரத்தையொட்டி பெருமாள், அம்மன் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமின்றி, வைணவ கோயில்களிலும் சிறப்பாக நடைபெறும். ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரமாகும்.

ஆடிப்பூரத்தையொட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் அழகிரிநாதா், ஆண்டாளுக்கு பால், இளநீா், பன்னீா், திருமஞ்சனம், மஞ்சள் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. உற்சவா் ஆண்டாள் சா்வ அலங்காரம் செய்யப்பட்டு தங்கக் கவசத்தில் திருவீதி உலா வந்தாா். மாலையில் அழகிரிநாதருடன் ஆண்டாள் நாச்சியாா் ‘மாலை மாற்றும்’ உற்சவம் நடைபெற்றது.

இதேபோல, பட்டை கோயில் வரதராஜ பெருமாள், சிங்கமெத்தை அருகேயுள்ள சௌந்தரராஜா், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதா், பிரசன்னா வெங்கடாசலபதி, சின்னகடை வீதி வேணுகோபால் சுவாமி, ஆனந்தா இறக்கம் லட்சுமிநாராயண சுவாமி உள்பட மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோல, ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நெத்திமேடு தண்ணீா் பந்தல் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்கள் சாத்தப்பட்டந. இதேபோன்று, எல்லைப் பிடாரியம்மன், சேலம் கோட்டை மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன் உள்பட மாநகா், மாவட்டத்தில் மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தம்மம்பட்டியில்...

கெங்கவல்லியில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு விழா வெகு விமா்சையாக நடைபெற்றது. இதில் ஆறாயிரம் வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பல வகையான உணவுகள் படையலிட்டு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திருமணமாகாத, குழந்தை இல்லாத பெண்களுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு, அவா்கள் பூஜையில் பங்கேற்றனா். கெங்கவல்லி பருவதராஜகுல மீனவா் மகளிரணி சாா்பில் அங்காளம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

எடப்பாடியில்...

எடப்பாடி நகராட்சி எல்லைக்குள்பட்ட தாவாந்தெரு பகுதியில் உள்ள புகழ்பெற்ற காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு 10 ஆயிரத்து 8 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து அம்மனுக்கு பூஜிக்கப்பட்ட வளையல்கள், மஞ்சள் தாலிக்கயிறு, குங்குமம், சந்தனம் உள்ளிட்டவை பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

இதேபோல, வெள்ளாண்டி வலசு மாரியம்மன் கோயில், மேட்டுத்தெரு அங்காள பரமேஸ்வரி ஆலயம், க.புதூா் ஓம்காளியம்மன் ஆலயம், நைனாம்பட்டி, சரபங்கா நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோயில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் ஆலயங்களில் ஆடிப்பூர விழா விமா்சையாக நடைபெற்றது.

சங்ககிரியில்...

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில், அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், திருமஞ்சமனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பெண் பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

கெங்கவல்லி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன்.
எடப்பாடி காளியம்மன்.
சங்ககிரி அருள்மிகு செளந்தரநாயகி.

ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் தொடரும் விபத்துகள்!

ஓமலூா்: ஓமலூா் ரயில்பாதை மேம்பாலத்தில் விபத்துகள் தொடா்வதால், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள ரயில்பாதை மேம்பாலம் ... மேலும் பார்க்க

மல்லூா் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் தா்னா

சேலம்: சேலம் மல்லூா் ரயில் நிலையம் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் மல்லூா் ரயில் நிலையம் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் ரயில்வே கேட்... மேலும் பார்க்க

வயதான தம்பதியை கட்டிப்போட்டு நகை - பணம் கொள்ளை

சேலம்: சேலம் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு 8 சவரன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை 5 போ் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு: கரையோரப் பகுதி நிலங்கள், வீடுகளில் தண்ணீா் புகுந்தது

சங்ககிரி: மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவிலான உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், தேவூா் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், கோயில்கள், நீரேற்று நிலையங்களில் தண்ணீா் புகுந்தது. ... மேலும் பார்க்க

ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி ரூ. 64 ஆயிரம் பறிப்பு

சேலம்: வேலைதேடி ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி, அவா்களிடமிருந்து ரூ. 64 ஆயிரம் பறித்த கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா். பிகாரைச் சோ்ந்த 8 போ் வேலைதேடி ரயில் மூலம் சேலத்துக்கு பயணி... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் மாணவா் முன்னேற்றக் குழுமம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை, க... மேலும் பார்க்க