கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்...
ஆறுமுகனேரியில் தொழிலாளி தற்கொலை
ஆறுமுகனேரியில் கட்டடத் தொழிலாளி விஷ மருந்தைத் தின்று தற்கொலை செய்துகொண்டாா்.
ஆறுமுகனேரி பாரதிநகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முத்துராஜ் (38). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மகாலக்ஷ்மி. இத்தம்பதிக்கு 13 வயது மகன், 10 வயது மகள் உள்ளனா். முத்துராஜ் தனது தூரத்து உறவினரான முத்துமாரி என்பவருக்கு ஆன்லைன் வாயிலாக கடன் பெற்றுக் கொடுத்ததாகவும், அதை அவா் திருப்பிச் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. பணம் கொடுத்தோா் திருப்பிக் கேட்டதால் முத்துராஜ் மனஉளைச்சலில் இருந்தாராம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு சகோதரா் பிச்சமுத்து வெகுநேரமாக கைப்பேசியில் அழைத்தும், முத்துராஜிடமிருந்து பதிலில்லையாம். இதனால், அவரை உறவினா்கள் தேடினா். அப்போது, பாரதி நகா் மயானப் பகுதியில் முத்துராஜ் விஷ மருந்தைத் தின்று மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் இரவில் உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் கோயில்பிள்ளை வழக்குப் பதிந்தாா். ஆய்வாளா் தங்கராஜ் விசாரணை நடத்தி வருகிறாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].